உத்தரப்பிரதேச தேர்தல்: சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக உள்ளோம் – அசாதுதீன் ஒவைசி

உத்தரப்பிரதேச தேர்தல்: சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக உள்ளோம் – அசாதுதீன் ஒவைசி

Jul 27, 2026

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம்” என்றார்.

Read More
நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு

நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு

Jul 27, 2026

நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளின் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தற்போதைய சூழலில் நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளின் எதிர்கால நடைமுறைகள் குறித்து விரிவாக சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read More
“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு

“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு

Jul 25, 2026

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள அவர், மாணவர்களுடனும் நாட்டின் எதிர்காலத்துடனும் நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், “நான் மாணவர்களுடனும், நமது தேசத்தின் எதிர்காலத்துடனும்

Read More
சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – கருத்துகள், பரிந்துரைகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – கருத்துகள், பரிந்துரைகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

Jul 24, 2026

சட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த வழிவகை செய்யும் ‘வக்கீல்கள் (திருத்த) வரைவு மசோதா 2026’-ஐ இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த வரைவு மசோதா சட்டக் கல்வி மற்றும் வழக்கறிஞர் தொழிலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதை நோக்கமாகக்

Read More
இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்கவரி; இந்தியாவுக்கு 10% வரி விதித்த அமெரிக்கா

இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்கவரி; இந்தியாவுக்கு 10% வரி விதித்த அமெரிக்கா

Jul 24, 2026

கட்டாயத் தொழிலாளர் உற்பத்தியுடன் தொடர்புடைய பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்கவரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த புதிய வரிக் கொள்கையின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட பொருட்களுக்கு 10 சதவீத சுங்கவரி விதிக்கப்படும். ஆரம்பத்தில் 12.5 சதவீத சுங்கவரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்ட நிலையில், இறுதியாக இந்தியாவுக்கு 10 சதவீத

Read More
மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று; நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு

மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று; நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு

Jul 24, 2026

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையுடன் இணைந்தே நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு CJP அழைப்பு விடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள்

Read More
சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் கருத்துகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் கருத்துகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

Jul 24, 2026

சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு வழிவகை செய்யும் அம்சங்களை உள்ளடக்கிய ‘வக்கீல்கள் (திருத்த) வரைவு மசோதா, 2026’-ஐ இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதா தொடர்பாக பொதுமக்கள், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்க இந்திய பார் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்களது கருத்துகளை draftadvact2026bill@gmail.com

Read More
“நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வேண்டுகோள்

“நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வேண்டுகோள்

Jul 23, 2026

வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு தேவையற்ற நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளைவிட வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த

Read More
நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்

நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்

Jul 23, 2026

நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், “ஜனநாயகனா..? ஜனநாயகமா..? தமிழக மக்களின் தீர்ப்பு யார் பக்கம்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை

Read More
CJP போராட்டம்: ஊடகங்களின் செய்தி வெளியீடு குழப்பத்தை ஏற்படுத்தியது – விமர்சனம்

CJP போராட்டம்: ஊடகங்களின் செய்தி வெளியீடு குழப்பத்தை ஏற்படுத்தியது – விமர்சனம்

Jul 23, 2026

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் கடந்த ஜூலை 20 நடைபெற்ற பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முறைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இதுகுறித்து வெளியான கருத்தில், போராட்டம் நடைபெற்ற நேரத்தில் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலையாக காட்சிகளை ஒளிபரப்பியது பார்வையாளர்களுக்கு சம்பவங்களை நேரடியாக அறியும் வாய்ப்பை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஜூலை

Read More