சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – கருத்துகள், பரிந்துரைகளை கோரிய இந்திய பார் கவுன்சில்
Education

சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – கருத்துகள், பரிந்துரைகளை கோரிய இந்திய பார் கவுன்சில்

Jul 24, 2026

சட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த வழிவகை செய்யும் ‘வக்கீல்கள் (திருத்த) வரைவு மசோதா 2026’-ஐ இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) வெளியிட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்த வரைவு மசோதா சட்டக் கல்வி மற்றும் வழக்கறிஞர் தொழிலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வழிவகுக்கும் விதமான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை draftadvact2026bill@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 31-க்குள் அனுப்பலாம் என இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னர், அதன் அடிப்படையில் இந்திய பார் கவுன்சில் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தனது இறுதி பரிந்துரைகளை வழங்க உள்ளது.

இந்த வரைவு மசோதா தொடர்பாக சட்டக் கல்வி வட்டாரங்களிலும், மாணவர்கள் மத்தியிலும் பரவலான விவாதம் எழுந்துள்ள நிலையில், பொதுமக்களின் கருத்துகளும் இறுதி பரிந்துரைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *