“மாணவர்கள் மீது தடியடி நடத்தும் நாடு தோல்வியடைந்துவிடுகிறது” – கமல்ஹாசன் உருக்கமான பதிவு
Politics

“மாணவர்கள் மீது தடியடி நடத்தும் நாடு தோல்வியடைந்துவிடுகிறது” – கமல்ஹாசன் உருக்கமான பதிவு

Jul 23, 2026

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, ராஜ்யசபா உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிசாய்ந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரு தேசத்தின் குழந்தைகள் பதில்களுக்குப் பதிலாக தடைகளையும் தடியடிகளையும் எதிர்கொள்ளும் போது, அந்த நாடு தோல்வியடைந்து விடுகிறது” என்று குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, “உங்கள் கடமையை நீங்கள் செய்துவிட்டீர்கள். இப்போது நாடு உங்களுக்காகத் தன் கடமையைச் செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ள கமல்ஹாசன், மாணவர்களின் உரிமைகளும் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகள், மாணவர் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், கமல்ஹாசனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *