“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள அவர், மாணவர்களுடனும் நாட்டின் எதிர்காலத்துடனும் நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், “நான் மாணவர்களுடனும், நமது தேசத்தின் எதிர்காலத்துடனும்
மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக காந்தி ஸ்மிருதியில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி; கல்வி அமைச்சர் பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்
டெல்லியில் நடைபெற்று வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை காந்தி ஸ்மிருதிக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முதலில் இந்தியா கேட் வரை பேரணியாகச் சென்று அங்கிருந்து காந்தி ஸ்மிருதிக்கு நடைபயணமாக செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், டெல்லி காவல்துறை
மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று; நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையுடன் இணைந்தே நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு CJP அழைப்பு விடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள்
நீட் எதிர்ப்பு போராட்டம்: பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் அமீர் தலைமையில் இன்று (ஜூலை 23) சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், “ஜனநாயகனா..? ஜனநாயகமா..? தமிழக மக்களின் தீர்ப்பு யார் பக்கம்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை
“மாணவர்கள் மீது தடியடி நடத்தும் நாடு தோல்வியடைந்துவிடுகிறது” – கமல்ஹாசன் உருக்கமான பதிவு
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, ராஜ்யசபா உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிசாய்ந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம்”
திருப்பரங்குன்றத்தில் நீட் எதிர்ப்பு ரயில் மறியல்; டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒற்றுமை தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம்
CJP போராட்டம்: ஊடகங்களின் செய்தி வெளியீடு குழப்பத்தை ஏற்படுத்தியது – விமர்சனம்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் கடந்த ஜூலை 20 நடைபெற்ற பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முறைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இதுகுறித்து வெளியான கருத்தில், போராட்டம் நடைபெற்ற நேரத்தில் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலையாக காட்சிகளை ஒளிபரப்பியது பார்வையாளர்களுக்கு சம்பவங்களை நேரடியாக அறியும் வாய்ப்பை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஜூலை
டெல்லி மாணவர் போராட்டம்: போலீசார் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தினரா? சிகிச்சையில் உள்ள போராட்டக்காரருக்கு பெல்லட் காயம் என தகவல்
டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய நடவடிக்கையில் காயமடைந்த போராட்டக்காரர்களில் ஒருவருக்கு பெல்லட் (Pellet) துப்பாக்கியால் ஏற்பட்ட காயம் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. லேடி ஹார்டிஞ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த போராட்டக்காரருக்கு பெல்லட் காயம்
“பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?” – மாணவர் போராட்டம் குறித்து ராகுல் காந்தி கேள்வி
நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை கேள்விக்குள்ளாக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையை “கரையான் அரிப்பதுபோல்” சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக
