நுழைவுத் தேர்வுகளில் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு
நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளின் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தற்போதைய சூழலில் நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளின் எதிர்கால நடைமுறைகள் குறித்து விரிவாக சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக காந்தி ஸ்மிருதியில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி; கல்வி அமைச்சர் பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்
டெல்லியில் நடைபெற்று வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை காந்தி ஸ்மிருதிக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முதலில் இந்தியா கேட் வரை பேரணியாகச் சென்று அங்கிருந்து காந்தி ஸ்மிருதிக்கு நடைபயணமாக செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், டெல்லி காவல்துறை
மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று; நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையுடன் இணைந்தே நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு CJP அழைப்பு விடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள்
“நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வேண்டுகோள்
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு தேவையற்ற நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளைவிட வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த
நீட் எதிர்ப்பு போராட்டம்: பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் அமீர் தலைமையில் இன்று (ஜூலை 23) சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், “ஜனநாயகனா..? ஜனநாயகமா..? தமிழக மக்களின் தீர்ப்பு யார் பக்கம்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை
“மாணவர்கள் மீது தடியடி நடத்தும் நாடு தோல்வியடைந்துவிடுகிறது” – கமல்ஹாசன் உருக்கமான பதிவு
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, ராஜ்யசபா உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிசாய்ந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம்”
திருப்பரங்குன்றத்தில் நீட் எதிர்ப்பு ரயில் மறியல்; டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒற்றுமை தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம்
தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி எதிர்க்கட்சி போராட்டம்; நாடாளுமன்றத்தில் ஆளும்-எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போட்டி ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்று, நீட் தேர்வு முறைகேடுகள்
திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்-உதயநிதி ஸ்டாலின்
நீட் (NEET) தேர்வு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், NEET தேர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தி இந்து (The Hindu) நாளிதழில் மு.க.ஸ்டாலின் எழுதிய கட்டுரை, “NEET தேர்வில் மட்டுமல்ல, NEET தேர்வே ஒரு
