நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் மட்டும் போதாது; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – சி.ஜே.பி.
National

நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் மட்டும் போதாது; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – சி.ஜே.பி.

Jul 23, 2026

நீட் (NEET) வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக சி.ஜே.பி. வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது மட்டுமே தீர்வாக இருக்காது என்றும், இந்த விவகாரத்திற்கு அரசியல் மற்றும் நிர்வாகப் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவை மேற்கோள் காட்டி, தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்காமல் வெறும் விசாரணை அறிவிப்புகள் போதாது என்றும் சி.ஜே.பி. கூறியுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக கடந்த சில வாரங்களாக டெல்லியில் சி.ஜே.பி. தலைமையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கல்வி அமைப்பில் சீர்திருத்தம், தேர்வு முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *