தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு: “தமிழ்நாட்டில் அரசு இருக்கிறதா?” – கனிமொழி கடும் விமர்சனம்
தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் போலீஸ் சித்திரவதையால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும்
நீட் எதிர்ப்பு போராட்டம்: பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் அமீர் தலைமையில் இன்று (ஜூலை 23) சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் கட்டுப்பாடுகள்: போராட்டம் அச்சத்தால் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல காவல்துறை தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள அனைத்து முக்கிய நுழைவாயில்களும் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல்
தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணமா? விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 26 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்பு காவல்துறை தாக்குதலால் ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலின்படி, அருணாச்சலம் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்
நீட் எதிர்ப்பு போராட்டம்: “இந்திய மாணவர்களுடன் கைகோர்த்து நிற்கிறேன்” – இயக்குநர் மாரி செல்வராஜ்
நீட் (NEET) தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அவரது பதிவில், “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும், அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின்
திமுக ஆட்சியிலும் தவெக ஆட்சியிலும் சட்டமன்ற கூட்டத்தொடர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒப்பீடு
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பான 2023 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகளை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது. வைரலாகி வரும் பதிவுகளில், 2023-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சட்டமன்ற அறிவிப்பில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ஆம் தேதி பேரவையில் தாக்கல்
தெருக்குறள் அறிவு கைது: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
நீட் (NEET) தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக ராப் பாடகரும் சமூக ஆர்வலருமான ‘தெருக்குறள்’ அறிவு கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசுக்கு எதிராக திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் என் அன்புச்
கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்
தமிழகத்தில் மின்கட்டண கணக்கீடு தொடர்பாக எழுந்துள்ள புகார்களுக்கு விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், நுகர்வோர் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்தத் தொகை அடுத்த மின்கட்டணத்தில் கழித்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். மின்சாரப் பயன்பாடு மற்றும் கட்டணக் கணக்கீடு தொடர்பாக சில இடங்களில் பொதுமக்கள் சந்தேகங்களையும் புகார்களையும் முன்வைத்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும், தமிழகம் முழுவதும்
தமிழ்நாட்டில் STEAM கல்வி அறிமுகம்: STEM-ஐ தாண்டி புதிய கல்வி அணுகுமுறை – அமைச்சர் ராஜ்மோகன்
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தற்போதைய STEM (Science, Technology, Engineering, Mathematics) கல்வி முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, STEAM (Science, Technology, Engineering, Arts, Mathematics) கல்வி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து பேசிய
“ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது!” மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அகிலேஷ் யாதவ் கடும் ஆவேசம்! மத்திய அரசைச் சாடி பகிரங்கக் கண்டனம்!
டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்குச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சுதந்திர இந்தியாவில் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகக் கொடூர நடவடிக்கை; அகிலேஷ் யாதவ் வெளியிட்ட அதிரடிக் குற்றச்சாட்டு! டெல்லி சம்பவத்தைக் கண்டித்துச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ள விபரங்கள் இதோ: “சுதந்திர
