நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; “மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்” தீர்மானம்
வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், லண்டனில் இருந்து காணொலி வாயிலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழகத்தின் உரிமையை உறுதியாக நிலைநாட்ட வேண்டும் என்ற தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், காவிரி நீர் உரிமை, தமிழகத்தின் நலன்கள் மற்றும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டிய முக்கிய கோரிக்கைகள் குறித்தும் எம்.பி.க்களுடன் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தமிழகத்தின் உரிமைகள் மற்றும் மாநில நலன் சார்ந்த பிரச்சினைகளை ஒருங்கிணைந்து முன்வைக்க திமுக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
