“பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார்?” – மாணவர் போராட்டம் குறித்து ராகுல் காந்தி கேள்வி
நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தை கேள்விக்குள்ளாக்கி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறையை “கரையான் அரிப்பதுபோல்” சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக
பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மத்தியப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பொது சிவில் சட்டம் (Uniform Civil Code – UCC) தொடர்பாக மத்தியப்பிரதேச அரசு முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவுக்கு மத்தியப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதாவின்படி, மாநிலத்தில் வாழும் பழங்குடியினருக்கு பொது சிவில் சட்டத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும்
2 ஆண்டுகளில் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ.262 கோடி செலவு: RTI தகவல்
ராஜ்யசபா உறுப்பினர்களுக்காக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் ரூ.262 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவைச் செயலகம் வழங்கிய தகவலின்படி, எம்.பி.க்களின் தினசரி படி, மாதாந்திர படி மற்றும் பயணச் செலவுகளுக்காக மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது. இதனுடன், அலுவலகம், நிர்வாகம் மற்றும் உறுப்பினர்களுக்கான
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு 2026: ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026-ன் முதற்கட்ட பணியாக, பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் குடும்ப விவரங்களை சுயமாக (Self Enumeration) இணையதளம் மூலம் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுய கணக்கெடுப்பு செய்வது எப்படி? 1. அதிகாரப்பூர்வ இணையதளமான se.census.gov.in-ஐ பார்வையிடுங்கள். 2. உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, OTP
70 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கொள்கை: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம் முக்கியமான மனிதாபிமான உத்தரவை பிறப்பித்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் மற்றும் குணப்படுத்த முடியாத தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒருங்கிணைந்த கொள்கையை மூன்று மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா
கல்வி அமைச்சராக சோனம் வாங்சுக்? – கெஜ்ரிவால் வலியுறுத்தல்
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கி, அவரது இடத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வி சீர்திருத்த ஆதரவாளருமான சோனம் வாங்சுக்கை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட கெஜ்ரிவால், நாட்டின் கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திறம்பட கையாளக்கூடியவர் சோனம் வாங்சுக் என்றும், கல்வித்
2020 அமெரிக்க தேர்தலில் சீனா தலையீடு? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையீடு செய்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தேர்தல் முடிவை தனக்கு எதிராக மாற்றும் நோக்கில் சீனா திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அதற்காக சட்டவிரோதமான முறையில் அமெரிக்க வாக்காளர்களின் தகவல்களைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் சுமார் 22 கோடி வாக்காளர்களின்
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: காந்தியின் கொள்கையை நினைவூட்டும் போராட்டமா?
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, அநீதியை செய்தவர்களின் மனசாட்சியை மாற்றிய மகாத்மா காந்தி, 1932 அக்டோபர் 30 அன்று உண்ணாவிரதம் குறித்து முக்கியமான கருத்தை பதிவு செய்திருந்தார். “காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு நான் விதிமுறைகளை வகுக்க முடியாது. ஆனால், ஒரு உண்ணாவிரதம் முழுமையான உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது ஒருவரின் மனசாட்சியின் உந்துதலால் மட்டுமே இருக்க வேண்டும்;
மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடக்கம்; ஜூலை 31 வரை ஆன்லைனில் விவரங்கள் பதிவு செய்யலாம்
தமிழகத்தில் முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) முதல் தொடங்கியுள்ளது. இந்த கட்டத்தில், பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான விவரங்களை ஆன்லைன் மூலம் சுயமாக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 31 வரை நடைபெறுகிறது. இணையதளத்தின் மூலம் குடும்பத்தினர், வீட்டு அமைப்பு, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை; “மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்” தீர்மானம்
வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், லண்டனில் இருந்து காணொலி வாயிலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மேகதாது அணை திட்டம் தொடர்பாக தமிழகத்தின் உரிமையை உறுதியாக நிலைநாட்ட வேண்டும்
