தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனை! 2 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திமுகவுக்கு வலைவீசும் என்டிஏ கூட்டணி! மத்திய அரசு தீவிர நம்பிக்கை!
தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை விரிவாக்கம் தொடர்பான 2 முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற, திமுகவின் ஆதரவைப் பெற ஆளும் என்டிஏ (NDA) கூட்டணி தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாத சிறப்பு கூட்டத்தொடரில் தோல்வியடைந்த 2 மசோதாக்கள்; தற்பொழுது என்டிஏ கூட்டணிக்கு உருவாகியுள்ள சாதகமான அரசியல் சூழல்! நாடாளுமன்ற மக்களவையில் இந்த மசோதாக்கள் தொடர்பாக நிலவும் தற்போதைய
பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மத்தியப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பொது சிவில் சட்டம் (Uniform Civil Code – UCC) தொடர்பாக மத்தியப்பிரதேச அரசு முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவுக்கு மத்தியப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதாவின்படி, மாநிலத்தில் வாழும் பழங்குடியினருக்கு பொது சிவில் சட்டத்தில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்படும்
CJP போராட்டம்: ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு திமுக கண்டனம்
தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் (NEET) தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) மற்றும் மாணவர்கள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2 ஆண்டுகளில் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ.262 கோடி செலவு: RTI தகவல்
ராஜ்யசபா உறுப்பினர்களுக்காக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் ரூ.262 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பெறப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவைச் செயலகம் வழங்கிய தகவலின்படி, எம்.பி.க்களின் தினசரி படி, மாதாந்திர படி மற்றும் பயணச் செலவுகளுக்காக மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது. இதனுடன், அலுவலகம், நிர்வாகம் மற்றும் உறுப்பினர்களுக்கான
டெல்லியில் தீவிரமடையும் இளைஞர்கள் போராட்டம்: நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி, பாதுகாப்பு பலப்படுத்தல்
நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இயக்கத்தின் முக்கிய முகமாக
தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரிக்கை: சி.ஜே.பி. பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு
புதுடெல்லி: தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பாம்பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் பிரதிநிதிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் மற்றும் பேரணிகள் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள நிலையில், பிரச்சினைக்கு தீர்வு
உலக சதுரங்க நாள்: இளம் வீரர்களுக்கு அரசு முழு ஆதரவு வழங்கும் – முதல்வர் விஜய்
சென்னை: உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக அரங்கில் சதுரங்கத்தின் தலைநகராக தமிழ்நாடு உருவெடுத்து வரும் நிலையில், இளம் தலைமுறையினர் சர்வதேச போட்டிகளில் சாதித்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது: த.வெ.க. அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் பண்புகள் இல்லாமல் செயல்படும் த.வெ.க. அரசு, அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காக கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியில் நடைபெறும் தவறுகள் மற்றும் அவலங்களை சுட்டிக்காட்டும் திமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற
தேசிய விருதுகள் வென்ற தமிழ் கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள நிலையில், விருது பெற்ற கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கு முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாகத் தேர்வானது,
பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை! “மழைக்காலக் கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாய் அமையும்!” நாடாளுமன்றம் சீராக நடைபெற எதிர்க்கட்சிகளுக்கு மோடி வேண்டுகோள்!
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் மிகவும் பயனுள்ளதாய் அமையும் எனத் தான் முழுமையாக நம்புவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகவும் அவசியம்; பிரதமரின் முக்கிய அறிக்கை விபரம்! நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முக்கியத்துவம் குறித்துப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்கள் இதோ: “நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தற்பொழுது முறைப்படி தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர
