
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார்.
அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள்.
தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார் திருச்சி தோழர்.ஆசிட் தியாகராஜன் அத்தகைய கருஞ்சட்டைத் தோழர்கள் பலர் வீரத்துடன் இயக்கத்திற்காக இருந்தார்கள் சக தோழர்களை பாதுகாத்து அரவணைத்தார்கள்.
அதுமட்டுமின்றி தண்டவாளம் கணேசன் , திருச்சி பிரான்சிஸ்,குடந்தை ஜோசப் என்று பல கருஞ்சட்டை மாவீரர்கள் வீதியில் நடந்து வந்தாலே பார்ப்பன பாசிச, ஆதிக்க எதிரிகளுக்கு கொலை நடுங்கும் இத்தகைய வரலாற்றை எல்லாம் தற்போது உள்ள இளைய தலைமுறையும் தற்போது உள்ள பெரியாரிய தோழர்களுக்கும் கொண்டு சேர்க்காமல் வரலாற்றை அழித்தது “அண்ட வந்தவரை தலைவராக ஏற்றுக் கொண்ட பெரியாரியக்க தலைவர்கள் தான்.
ஒரு கருஞ்சட்டைத் தோழர் பாதிக்கப்பட்டால் அங்கு ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் பதில் கொடுப்பார்கள்.இந்தியாவிலேயே அதிக பணம் வாங்கும் உயர் வழக்கறிஞர்களை வைத்து பல்வேறு காரணத்தால் வழக்கு பெற்ற கருஞ்சட்டைத் தோழர்களுக்காக தந்தை பெரியார் அவர்களே அழைத்து வந்து வாதாடுவார். இயக்கத்தை ஒரு கம்பீரமான கட்டமைப்புடன் பாதுகாப்புடன் தந்தை பெரியார் அவர்கள் கட்டமைத்தார்.
ஆனால் இன்று தந்தை பெரியார் அவர்களையும் தலைவராக ஏற்றுக் கொண்டு புலியாரிசம் பேசும் பெரியாரியக்க தலைவர்களே தற்போது கருஞ்சட்டைத் தோழர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா..? பெரியாரிய இயக்கங்கள் வீரியமாக உள்ளதா..? இளைய தலைமுறைகள் பெரியாரிய இயக்கங்களில் இணையாமல் ஏன் புதிய இயக்கங்களையும் கட்சிகளையும் நாடுகிறார்கள்..?
ஏனென்றால் தற்போது உள்ள பெரியாரியக்க தலைவர்கள் பெரியாரியலை மட்டும் பேசாமல் புலியாரியலை தூக்கி பிடித்து பேசுவதுதான்… பெரியாரிய பிரச்சாரங்களும் பொதுக்கூட்டமும் சரிவர செய்யாமல் மேலோட்டமான அரசியலை நடத்தி கருஞ்சட்டைத் தோழர்களை மந்தமாக விறுவிறுப்பு இல்லாத புது புது தகவல்களையும் அறிய முடியாத வண்ணம் உருவாக்குகின்றனர்.இது பெரியாரிய இயக்கங்களுக்கு கேடு தான் விளைக்கும்.விரைவில் அழிவை தரும்.
மக்களிடம் பெரியாரிய பிரச்சாரத்தை செய்யாமல் ஓட்டு கட்சி போல கட்சிகளுக்கு வாக்கு பிரச்சாரம் செய்வதையே முழு வேலையாக செய்கிறோம்.பெரியாரிய காலத்தில் நடந்தது போல் இன்று தெருமுனை பிரச்சாரம் கூட செய்ய முடியாதது ஏன்..? அன்று தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கு விடிவெள்ளியாகவும் இருளை நீக்க வந்த ஈரோட்டு சூரியனாகவும் இருந்தார்.ஆனால் தற்போது புலியாரிசம் பேசும் பெரியாரியக்க தலைவர்கள் மக்களுக்கு ஒரு விளக்கு சுடராக கூட இல்லை.காரணம் மக்களிடம் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படவில்லை அண்ட வந்தவரை தலைவராக ஏற்றுக் கொண்டு அவருடனே ஒன்றினைந்து செயல்பட்டதன் விளைவு தான் இந்த வீழ்ச்சிக்கு காரணம்.
ஒரு கொள்கையை உருவாக்கி அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து அக்கொள்கையை நடைமுறைப்படுத்தி கண் முன் பார்த்து வாழ்ந்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள் அவர்களின் வழி வந்த பெரியாரியக்க தலைவர்களே, பெரியாரியல் பேசுவதை விட்டு விட்டு புலியாரியல் பேசுவதற்கும் பௌத்த வியாபாரம் செய்யவும் வெட்கமாக இல்லையா..? தந்தை பெரியாருக்கு நிகரான தலைவர் உண்டா…? உங்களை நம்பி அண்ட வந்தவர் பெரியாருக்கு இணையான தலைவரா..? சிந்தியுங்கள்…
(தொடரும் -3)
தமிழன். சு.கவின் குமார்
தலைமை நிலைய செயலாளர்
தோழர் களம்