“தூய பெட்ரோல் உங்க அப்பா வீட்டிலிருந்தா வரும்?” – E20 பெட்ரோல் குறித்து பாஜக எம்பி சர்ச்சை பேச்சு!
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பைக் கடுமையாக ஆதரித்துப் பாஜக மக்களவை உறுப்பினர் ஜனார்த்தன் மிஸ்ரா பேசிய பேச்சுப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“20% எத்தனால் கலப்பை எதிர்ப்பவர்களுக்குப் பதில்!” – ஜனார்த்தன் மிஸ்ரா சாடல்!
பாஜக மக்களவை எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா பேசியதன் முழுமையான விவரங்கள் இதோ:
“20% எத்தனால் கலப்பை எதிர்ப்பவர்களைப் பார்த்து ஒன்று கேட்க விரும்புகிறேன்.
சுத்தமான பெட்ரோல் உங்க அப்பா வீட்டிலிருந்தா வரும்?
சுத்தமான பெட்ரோலே நாட்டில் இல்லாத போது, அது வேறு எங்கிருந்து வரும்?
உலகில் அதிக எத்தனாலை உற்பத்தி செய்யும் பிரேசிலில், வாகனங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் 100 சதவீதம் எத்தனாலில் இயங்குகின்றன.
அப்படியிருக்கையில், நம் நாட்டில் அது சாத்தியமாகாதா?
எந்தப் பிரச்னையும் இல்லையென நிபுணர்களும் சொன்ன பிறகு எத்தனால் கலப்புக்கான எதிர்ப்புகள் தேவையற்றவை.”
எத்தனால் கலப்புக் கொள்கை மற்றும் மிஸ்ராவின் வாதங்கள்!
ஜனார்த்தன் மிஸ்ரா முன்வைத்த முக்கியக் கருத்துகள் வருமாறு:
- பிரேசில் முன்மாதிரி: உலகளவில் அதிக எத்தனால் உற்பத்தி செய்யும் பிரேசிலில் 100% எத்தனாலில் வாகனங்கள் இயங்குகின்றன.
- இந்தியாவில் சாத்தியம்: பிரேசிலில் சாத்தியமாகும் போது இந்தியாவிலும் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு நிச்சயமாகச் சாத்தியப்படும்.
- நிபுணர்களின் கருத்து: எத்தனால் கலப்பினால் என்ஜின்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனப் தொழில்நுட்ப நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
- எதிர்ப்புகளுக்குக் கண்டனம்: எத்தனால் கலப்புக் கொள்கைக்கு நாட்டில் கிளப்பப்படும் எதிர்ப்புகள் முற்றிலும் தேவையற்றவை.
பாஜக எம்பி ஜனார்த்தன் மிஸ்ராவின் இந்த அதிரடியான பேச்சு சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது.
