வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு அசத்தல் அப்டேட்! கணினியிலேயே ஆடியோ, வீடியோ கால்கள் பேச புதிய வசதி!
technology

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு அசத்தல் அப்டேட்! கணினியிலேயே ஆடியோ, வீடியோ கால்கள் பேச புதிய வசதி!

Jul 30, 2026

வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) தளத்தில் செயலியைப் பதிவிறக்காமல் நேரடி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைப் பேசும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செயலி தேவையில்லை; பிரவுசர் மூலமாகவே நேரடி அழைப்புகள் பேசலாம்!

வாட்ஸ்அப் வெப் புதிய அப்டேட்டின் முக்கிய அம்சங்கள் இதோ:

“கணினியில் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

வாட்ஸ்அப் வெப் பிரவுசர் மூலமாகவே நேரடியாக ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைப் பேசும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.”

கால் டிரான்ஸ்ஃபர் முதல் Waiting Room வரை; புதிய அம்சங்களின் முழுப் பட்டியல்!

புதிய வாட்ஸ்அப் வெப் அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:

  • Call Transfer வசதி: அழைப்பைத் துண்டிக்காமல் மொபைலிலிருந்து கணினிக்கும், கணினியிலிருந்து மொபைலுக்கும் மாற்றிக் கொள்ளும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
  • Waiting Room வசதி: குழு அழைப்புகளைக் (Group Calls) எளிதாகக் கட்டுப்படுத்த Waiting Room வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • QUICKHD அம்சம்: மிகவும் தெளிவான வீடியோ அனுபவத்தை வழங்குவதற்காக QUICKHD அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
  • Noise Suppression: பின்னணிச் சத்தங்களை நீக்கி தெளிவான குரலை வழங்கும் Noise Suppression தொழில்நுட்பமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இலவசம் மற்றும் பாதுகாப்பு: வாட்ஸ்அப் வெப் வழியே பேசப்படும் அனைத்து அழைப்புகளும் முற்றிலும் இலவசம் என்பதோடு End-To-End Encrypted பாதுகாப்பு கொண்டவையாகும்.

கணினியில் செயலியைப் பதிவிறக்காமலேயே பிரவுசர் வழியாகவே வீடியோ, ஆடியோ கால்களைப் பேச வாட்ஸ்அப் வழங்கி உள்ள இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *