“இது Sofa Model அரசு!” கடலூர் கொலை விவகாரத்தில் முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
Tamilnadu

“இது Sofa Model அரசு!” கடலூர் கொலை விவகாரத்தில் முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

May 29, 2026

சென்னை கோடம்பாக்கம் சிறுவன் விவகாரத்தைத் தொடர்ந்து, கடலூரில் நடந்துள்ள மற்றொரு கொடூர சம்பவம் தமிழக அரசியலில் சட்டம் ஒழுங்கு விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை மற்றும் முதலமைச்சர் விஜய்யை மீண்டும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“இது சோஃபா மாடல் அரசு!” உதயநிதி கடும் விமர்சனம்

கடலூர் கொலை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ள விமர்சனம் வருமாறு:

“கடலூரில் 25 வயது பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் இப்படித் தொடர்ச்சியாக நடக்கும் குற்றச்சம்பவங்களைப் பார்க்கும் போது, சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் மக்களுக்கு வருகிறது.

இந்த #SofaModelஅரசு தமிழ்நாட்டில் அமைந்தது முதல், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என்ற அவலநிலை உருவாகியுள்ளது.”

“முதல்வர் டீப் ஸ்லீப் மோடுக்கு போய்விட்டார்!”

தேர்தல் காலப் பிரச்சாரங்களை ஒப்பிட்டு முதலமைச்சர் விஜய்யை உதயநிதி நேரடியாகத் தாக்கியுள்ளார். “தேர்தல் பிரச்சாரத்தில் பக்கம் பக்கமாகப் பேப்பர்களை கையில் வைத்துக்கொண்டு, சட்டம் ஒழுங்கு பற்றி வாய்கிழிய பஞ்ச் டயலாக் பேசினார். ஆனால், தற்போது முதலமைச்சர் ஆனதும் அவர் ‘டீப் ஸ்லீப் மோடுக்கு’ (Deep Sleep Mode) போய்விட்டார்” என்று உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

சிங்கப்பெண்கள் படை தொடக்க விழா ரத்து ஏன்?

பெண்கள் பாதுகாப்புக்காகத் தவெக அரசு அறிவித்த புதிய திட்டத்தின் குளறுபடிகளையும் உதயநிதி சுட்டிக்காட்டியுள்ளார். “பெண்கள் பாதுகாப்புக்காக நீங்கள் அறிவித்த ‘சிங்கப்பெண்கள் படை’ பிரிவின் தொடக்க விழாவைக் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளீர்கள்.

இந்த நிகழ்ச்சியைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்துள்ளீர்களா? அல்லது அந்த முயற்சியையே ஒட்டுமொத்தமாகக் கைவிட்டு விட்டீர்களா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். சிங்கப்பெண் படை எனப் பெயரையும், சீருடையையும் (Uniform) மாற்றுவது மட்டும்தான் உங்கள் ஆட்சியில் மாற்றமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் உங்களுக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகிறதா? நீங்கள் பொறுமையாக டைம் எடுத்து, நிர்வாகத்தைக் கற்றுக்கொண்டு வந்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார் (CM Sir)” என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் மிகவும் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *