தமிழ்நாட்டில் 2026-ல் முக்கிய திட்டங்கள், துறைகளின் பெயர் மாற்றம்: முழு பட்டியல்
தமிழக அரசு 2026-ஆம் ஆண்டில் பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் துறைகளின் பெயர்களை மாற்றி அறிவித்துள்ளது. நிர்வாக மாற்றங்கள் மற்றும் புதிய அணுகுமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும் துறைகளின் விவரங்கள் பின்வருமாறு:
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை → சமூக நீதித்துறை (07.07.2026)
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் → பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் (22.07.2026)
- நான் முதல்வன் திட்டம் → திறன் தமிழ்நாடு (TN Skill) (17.06.2026)
- மகளிர் விடியல் பயணம் → மகளிர் பயணம் (09.07.2026)
- முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் → வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் (22.07.2026)
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (100 நாள் வேலை) → வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (VB GRAM-G) (01.07.2026)
இந்த பெயர் மாற்றங்கள் நிர்வாக ஆவணங்கள், அரசு அறிவிப்புகள் மற்றும் திட்ட செயல்பாடுகளில் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசு திட்டங்களின் புதிய பெயர்களை பொதுமக்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
