
பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!
எனக்கு தலைவர்
தந்தை பெரியார் மட்டும் தான்…
தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராக
ஏற்றுக்கொண்டுள்ளனர்..?
அண்ட வந்தவருக்கு
இங்குள்ள ஒருவர்
அடைக்கலம் கொடுத்தால்
அண்ட வந்தவர் தானே,
அடைக்கலம் கொடுத்தவரை
தலைவராக ஏற்க வேண்டும்..!
அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,
அண்ட வந்தவரை
தலைவராக ஏற்றார்..?
தனித்தமிழ்நாடு பேசும்
எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!
அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..?
தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள் பட்ட பல இன்னல்களை போக்கவும் கர்னாடக மாநில சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மற்றும் நாகப்பா என்ற இரு பெரும் முக்கிய நபர்களை சிறைப்பிடித்து தமிழ்நாட்டிற்காக போராடிய மாவீரன் வீரப்பனை விட்டுவிட்டு அண்டைய நாட்டில் உள்ள ஒருவரை மாவீரர் என்றும் தலைவர் என்றும்
ஏற்றுக்கொண்டது ஏன்..?
அண்டைய நாட்டில் நடந்த படுகொலைகள் அவர்கள் பட்ட வேதனைகள் ஏற்க்க முடியாதது, மன்னிக்கவும் கூடாதது..உண்மை தான்,… ஆனால் அதனை மட்டும் தமிழ்நாட்டில் பேசி பேசி, என் நாட்டு பெரியாரிய தோழர்கள் சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு பின் பட்ட வேதனைகளையும், உயிர் இழப்பையும் பற்றி நாளை தலைமுறையினர் வரலாற்றை அறியாத வண்ணம் செய்ததன் நோக்கம் என்ன..?
நாங்கள் திராவிட குடும்பத்தினர்
நாங்கள் திராவிட இயக்கத்தினர்
நாங்கள் திராவிட வம்சாவளி
நாங்கள் திராவிட இரத்தம்
நாங்கள் திராவிட தோழர்கள்
என்று மூச்சுக்கு முன்னூறு முறை
திராவிடம் பேசும் எனது அருமை பெரியாரியக்க தலைவர்களே..,
பெரியாரும் அண்ணாவும் பக்குவப்படுத்திய நம் தமிழ்நாட்டில்,
அண்ணாவின் புகைப்படங்களை தனது இயக்க சுவரொட்டி, துண்டறிக்கை மற்றும் பிற இயக்கம் சார்ந்த நிகழ்வுகளின் பயன்படுத்தாமல்
அண்டைய நாட்டு வீரனை
தலைவனாக ஏற்று விளம்பரமாக செய்வதன் அவசியம் என்ன..?
உங்கள் அண்ட வந்த தலைவர் என் நாட்டிற்கு செய்த நன்மை தான் என்ன..? தாகத்தில் தவிக்கும் என் மக்களுக்கு ஒரு சொம்பு தண்ணீர் தந்திருப்பாரா..?இல்லை உங்கள் மனைவி மக்களுக்கு ஒரு வேலை உணவு தான் போட்டிருப்பாறா..?
முதலில் மாற வேண்டியது உங்கள் முடிவுகள்… பின் தான் உங்கள் கொள்கை தலைவர் யார் என்று தெரியும்..? நம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்
தள்ளாடிய வயதிலும் மூத்திர சட்டியோடு போராடிய
எம் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு நிகர் அண்ட வந்த ஒருவரை தலைவராக ஏற்கலாமா..?
இது பெரியாரியலை கருவறுத்து விட்டு புலியாலியலை வளர்க்கும் செயலல்லவா..? இந்த செயலுக்கு என்ன காரணம்..?
நேற்று ஈரோட்டில் என் சக பெரியாரிய தோழன் நேற்று வந்த பிஜேபியின் கைக்கூலி சீமானின் இயக்கத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு யார் காரணம்..? நீங்களும் காரணம் தான்..
வாயை வைத்து பிழைப்பு நடத்தும் பி.ஜே.பி மற்றும் அர்.எஸ்.எஸ் அடிமை
சீமான் போன்றோர்கள் தந்தை பெரியார் மீது பொய்யான அவதூறு பரப்புவதற்கு யார் காரணம் நீங்களும் காரணம் தான்..
(தொடரும்..2..)
தமிழன்.சு.கவின்குமார்
தலைமை நிலைய செயலாளர்
தோழர் களம்