“717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா?” – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கூற்று குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூடப்பட்டதாகக் கூறப்படும் டாஸ்மாக் கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் கூட வெளியிடப்படவில்லை. உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “அல்லது, மக்களிடையே நற்பெயர் பெறும் நோக்கில் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த தகவலை தமிழக அரசே பரப்புகிறதா?” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக வெளியான அரசின் அறிவிப்புக்கு ஆதாரமாக முழுமையான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் கடைகள் மூடல் தொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவரின் இந்த கேள்வி தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
