CJP பாணியில் உருவானது ‘E20 Janta Party’! 100% தூய்மையான பெட்ரோல் வழங்க வலியுறுத்தல்! நிதின் கட்கரி ராஜினாமா செய்யக் கோரி பிரசாரம்!
நீட் விவகாரத்தில் CJP பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 100% பெட்ரோல் பெற நுகர்வோர் உரிமையை வலியுறுத்தி “E20 Janta Party” என்ற புதிய அமைப்பு களமிறங்கியுள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) வெற்றியைத் தொடர்ந்து புதிய அமைப்பு; சமூக வலைதளங்களில் “E20 Janta Party” திடீர் பிரசாரம்!
E20 ஜனதா கட்சி உருவாக்கத்தின் பின்னணி விபரங்கள் இதோ:
“நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் காரணமாக ‘Cockroach Janta Party’ இருந்தது.
இந்த ‘Cockroach Janta Party’-யின் தீவிரப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ‘E20 Janta Party’ (EJP) என்ற புதிய அமைப்பு தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை மையமாகக் கொண்டு இந்த அமைப்பு சமூக வலைதளங்களில் தனது பிரசாரத்தைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது.”
100% பெட்ரோல் வாங்குவதற்கான உரிமை வேண்டும்; சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!
E20 ஜனதா கட்சியின் முதன்மை கோரிக்கைகள் வருமாறு:
- நுகர்வோர் உரிமை: பெட்ரோல் பங்குகளில் நுகர்வோருக்கு 100% தூய்மையான பெட்ரோலை தேர்வு செய்து வாங்குவதற்கான முழு வாய்ப்பை வழங்க வேண்டும்.
- கலப்படக் கட்டுப்பாடு: எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் கட்டாயமாக்கப்படுவதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்களுக்குத் தனித் தேர்வு வழங்கப்பட வேண்டும்.
- அமைச்சர் ராஜினாமா கோரிக்கை: இக்கொள்கையைக் கண்டித்துச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ராஜினாமா செய்ய இவ்வமைப்பு வலியுறுத்தி வருகிறது.
CJP அமைப்பின் பாணியில் E20 எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு எதிராக ‘E20 Janta Party’ பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளது நுகர்வோரிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
