இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க சைப்ரஸ் அதிரடி முடிவு! பீதியில் உறைந்த துருக்கி அதிபர்!
உலக அரங்கில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தயாரிப்புகளுக்குக் குறிப்பாகப் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு (BrahMos Missiles) நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், தற்போது இந்தியாவிடமிருந்து அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் காமிகேஸ் ட்ரோன்களை (Kamikaze Drones) வாங்குவதற்கு ஐரோப்பிய நாடான சைப்ரஸ் (Cyprus) தனது கடுமையான விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
நாகாஸ்த்ரா-1 மற்றும் ஸ்கைஸ்ட்ரைக்கர் ட்ரோன்கள்!
சைப்ரஸ் நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் சமீபத்தில் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் போது, இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், இந்தியாவின் அதிநவீன ‘நாகாஸ்த்ரா-1’ (Nagastra-1) மற்றும் ‘ஸ்கைஸ்ட்ரைக்கர்’ (SkyStriker) போன்ற காமிகேஸ் தற்கொலைப்படை ட்ரோன்களை வாங்குவதிலும் சைப்ரஸ் ஆர்வம் காட்டியுள்ளது. இவற்றுடன், கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் கூட்டாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
துருக்கி அதிபர் எர்டோகனுக்கு விழுந்த பலத்த அடி!
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவ ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், அது துருக்கி அதிபர் ரசிப் தையீப் எர்டோகனுக்குக் கிடைக்கப் பெறும் மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படும். சைப்ரஸ் நாட்டின் வட பகுதியை நீண்ட காலமாகத் துருக்கி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.
தற்போது சைப்ரஸ் ராணுவம் இந்திய ஆயுதங்களால் பலமடைந்தால், அது ஆக்கிரமிப்பு துருக்கியின் பாதுகாப்பிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறும். இதனால், சைப்ரஸ் நாட்டின் இந்த புதிய பாதுகாப்பு உத்தி துருக்கி அரசுக்குள்ளே கடுமையான பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நினைவலைகள்: நடுவானில் சுடப்பட்ட ட்ரோன்கள்!
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய அதிரடியான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ரகசியமாக அனுப்பியிருந்தது. அவற்றை இந்திய எல்லைகளை நோக்கிப் பாகிஸ்தான் இயக்கியது. ஆனால், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence) அந்த துருக்கி நாட்டு ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டின.
மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்களைத் தரைமட்டமாக்கியதை உலக நாடுகள் நன்கு அறியும். இந்திய ஆயுதங்களின் இந்த அசாத்திய திறனைப் பார்த்தே, தற்போது சைப்ரஸ் நாடு இந்த கொள்முதல் முடிவை எடுத்துள்ளது.
