தென்னிந்தியா முழுக்க மின்சாரம் கிடைக்க, தனக்கு சொந்தமான 600 ஏக்கரை அரசுக்கு தானமாக வழங்கிய வள்ளல் திரு ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஆவார். ஆனால் அவர் ஒரு பார்ப்பனர் அல்லாதார் என்ற காரணத்தாலேயே, வரலாற்றில் இருந்து மறைக்கப்படுகிறார். அவர் வள்ளல் மட்டுமா ? இல்லை இல்லவே இல்லை…. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி… முற்போக்குவாதி… நீதிக்கட்சிக்காரர்… பெரியாரின் உற்ற நண்பர்…
பழைய தென்னார்க்காடு மாவட்டம் , இன்றைய கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையன் குப்பம் (இன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு உள்ளே ) என்னும் பகுதியில் இருந்த வன்னியர் மக்களை பார்ப்பன அதிகாரிகள் திட்டமிட்டு குற்றப்பரம்பரை என்று கரும்புள்ளி குத்திய பொழுது, அதனை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர் ஜம்புலிங்க முதலியார் ஆவார்… அதற்காக அந்த மக்கள் அவருக்கு என்றென்றும் நன்றிகடனோடு இருக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் குடியரசில் கட்டுரை எழுதுகிறார்.
அதுமட்டுமா ? 1937 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில், கடலூர் பகுதியில் நீதிக்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நமது ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஓட்டு சேகரித்ததை, பெரியார் இவ்வாறு எழுதுகிறார் … ” அந்தப் பகுதியில் இருக்கும் கடைசி பார்ப்பன பூண்டு கூட நினைவில் வைத்துக் கொள்ளும்படி நமது ஜம்புலிங்கம் முதலியார் அவர்கள் பார்த்துக் கொள்வார் “…
கப்பலோட்டிய தமிழன் வ உ சி மட்டும் ஒரு பார்ப்பனராக இருந்திருந்தால் அவரது சிலையை ஒவ்வொரு பார்ப்பனர் வீட்டிலும் வைத்து வழிபட்டு இருப்பார்கள் என்று பெரியார் கூறுவாரே…. அதுபோலவே,
ஒருவேளை நமது வள்ளல், புரட்சியாளர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் ஒரு பார்ப்பனராக இருந்திருந்தால், இந்நேரம் அவரை இந்திய தேசியத்தின் தந்தையாக கூட இந்த பார்ப்பனர்கள் மாற்றி இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.