“விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்!” – பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்.
Politics

“விசில் சின்னத்துக்கு வாக்களியுங்கள்!” – பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்.

Mar 30, 2026

சென்னை | மார்ச் 30, 2026

தமிழக அரசியலில் புதிய அலை கிளப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது தாய் வீடாகக் கருதும் வட சென்னையின் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில், திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடி தனது முதல் தேர்தல் பிரச்சார உரையை ஆற்றினார்.

விஜய்யின் பிரச்சார உரையில் இடம்பெற்ற ‘டாப்’ 5 அதிரடிகள்:

  1. திமுக அரசுக்கு முடிவு: “ஊழல் மிகுந்த, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இந்த ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சிக்கு மக்கள் இந்தத் தேர்தலோடு முற்றுப்புள்ளி வைப்பார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தத் தேர்தலோடு விடைபெறப் போகிறார்.”
  2. பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி: “நம் வீட்டுப் பெண் பிள்ளைகள் இரவில் கழிவறை செல்லக்கூடப் பயப்படும் நிலைதான் உள்ளது. மூதாட்டிகளைக் கூட இந்த ஆட்சியில் விட்டுவைப்பதில்லை. டீக்கடைக்குச் சென்றால் கூட வெட்டு, குத்து நடக்கிறது. இந்த ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?” என ஆவேசமாக வினவினார்.
  3. குடும்ப அரசியல் மற்றும் ஊழல்: “ஸ்டாலின் அரசுக்கு மக்கள் பாதுகாப்பு மீது அக்கறையில்லை; தன் குடும்பச் சொத்தைப் பெருக்குவதில்தான் அக்கறை. நகராட்சி நிர்வாகத் துறை வேலைவாய்ப்பில் நடந்துள்ள ஊழல், இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.”
  4. வாக்காளர்களுக்கு அறிவுரை: “அவர்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், பதிலுக்கு அவர்கள் காதில் விசிலை ஊதித் திருப்பி அனுப்புங்கள். உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்.”
  5. இளைஞர்களுக்கு அழைப்பு: “ஜென் ஸீ (Gen Z) இளைஞர்களே, ஏப்ரல் 23-ஆம் தேதி மறவாமல் வாக்களியுங்கள். வாக்குப் பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு நேராக இருக்கும் பொத்தானை அழுத்தத் தவறாதீர்கள்.”

பெரம்பூர் தொகுதியில் மும்முனைப் போட்டி:

விஜய் பெரம்பூரில் களம் இறங்கியுள்ளதால், இந்தத் தொகுதி தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது.

  • விஜய் – தமிழக வெற்றிக் கழகம் (TVK)
  • ஆர்.டி. சேகர் – திமுக (DMK)
  • ம. திலகபாமா – பாமக (AIADMK கூட்டணி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *