அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம்! தமிழக பட்ஜெட் 2026 சமூக நீதித் துறை அறிவிப்புகள்!
சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான பல்வேறு புதிய திட்டங்களை நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல திட்டங்கள்!
சமூக நீதித் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட முக்கிய நிதி ஒதுக்கீடுகள் இதோ:
“அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டம் ரூ.131 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
வெற்றி தொழில்முனைவோர் திட்டத்திற்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்ற ‘மண்ணின் மகள்’ திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பழங்குடியினரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் ‘ஆன்றோர் மேம்பாட்டு திட்டம்’ ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு கூறுகள் திட்டத்தின் கீழ் ரூ.25,225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் ரூ.2,079 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருத்த வரவு – செலவு திட்ட மதிப்பீடுகளில் சமூக நீதித்துறைக்கு ரூ.3,935 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.”
69% இடஒதுக்கீடு பாதுகாப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன்!
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை அறிவிப்புகள் வருமாறு:
- இடஒதுக்கீடு பாதுகாப்பு: தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும்.
- கல்வி உதவித்தொகை: BC / MBC / DNC மாணவர்கள் கல்வி பயில கல்வி உதவித்தொகையாக ரூ.372 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மருத்துவக் கல்வி கட்டணம்: 7.5% இடஒதுக்கீட்டில் பயிலும் மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்திற்காக ரூ.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஊக்கத்தொகை: மாணவிகளின் கல்வி இடைநித்தலைத் தவிர்க்கும் ஊக்கத்தொகை திட்டத்திற்காக ரூ.13.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனை மேம்படுத்தும் வகையில் தமிழக பட்ஜெட் 2026-ல் பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
