
உரசுவோம் சீமானை – பெரியாரை பேசி பேசி இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்த RSS கைக்கூலி சீமான்
RSS அமைப்புகள் எந்த பெரிய விஷயத்தையும் உடனே செய்ய மாட்டார்கள், எதிலும் நீண்ட நெடிய திட்டமிடல் இருக்கும்
காந்தியடிகள் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போலதான் சீமானும். செயல்திட்டத்தை அழகாக திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் செய்து காட்டும் சாதுர்யம் அவர்களுக்கு உண்டு
சீமான் பேசும் பல விஷயங்களை பகிரங்கமாக பாராட்டும் பாஜகவினர், தமிழத்தில் பாஜக அயோக்கியர்கள் கைது செய்யப்படும் போது சீமான் பாராட்டுவதும் எதேச்சையாக நடப்பவை அல்ல
பீமா கோரேகான் சம்பவத்தில் கைது செய்து மக்களுக்காக உழைத்த 84 வயது கிழவனை (அருட்தந்தை ஸ்டான் சாமி) மரணிக்கும் வரை சிறை வைத்த ஒன்றிய அரசு, மோடி அமித்ஷா ஆகியோரை சீமான் நேரடியாக எல்லை மீறி விமர்சனம் செய்தாலும் சாந்த சொரூபியாக இருப்பது எதேச்சையாக நடப்பவை அல்ல
இந்திய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட LTTE அமைப்பை முன்னிறுத்தி அதன் தலைவர் மேதகு பிரபாகரனை அடையாளப்படுத்தி நம்மில் யாராவது ஒருவர் மேடை போட்டால் அடுத்த நாளே நாம் சிறையில் இருப்போம், ஆனால் சீமானுக்கு இது நடக்காமல் இருப்பதும் எதேச்சை என்று நாம் நம்பினால் நம்மை போன்ற முட்டாள் யாருமில்லை
மெகா சீரியல்கள் மட்டுமல்ல, சீமானும் பல வருடங்களாக இங்கே அரைத்த மாவை தான் அரைத்து வருகிறார்
என்னை பொறுத்த வரை விஜயலட்சுமி முன்னால் காதல் கணவர் சீமான் பெரியாரை பற்றி பேசி அவரை மேலும் மக்களிடம் சென்றடைய வழி செய்கிறார், அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டாலும் அவரை RSS நபராக பார்ப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும், அவரை உரச உரச காவி குணங்கள் வெளிவந்து கொண்டே இருக்கும், உரசுவோம் !!!!