தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :
Opinion

தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

Mar 21, 2025

தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று.

தலித்தியம் தத்துவம் பேசும் அறிவுஜீவிகள், எந்த ஒரு தருணத்திலும் கொண்டு வரும் உரையாடலானது –

♦பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், திராவிடர் இயக்கம் அந்த மக்களுக்காக மட்டுமே வேலை செய்வர் என்பதும் ;

♦பெரியாரும் அவரது சகாக்களும் இங்கே அம்பேத்கரை மறைதுவிட்டணர் என்றும்;

♦பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தான் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று கூறி பார்ப்பனர்களை உத்தமர்களாக காட்ட முயற்சிப்பதும்;

♦நீங்கள் எல்லாம் சூத்திரர்கள், நாங்கள் எல்லாம் அவர்நாஸ் / பஞ்சமர்கள் என்று OBC – SC மக்களை பிரிப்பது.

இதன் மூலம், இந்த அறிவுஜீவிகள் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலையை தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாமல், இங்குள்ள பார்ப்பனரல்லாத ( பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, கிறிஸ்துவ, இஸ்லாமிய, இன்னும் பிற ) மக்களின் ஒற்றுமையை சிதைத்து, அதன் மூலம் இங்கே பண்பாட்டு வல்லாதிக்கும் செலுத்தும் பார்ப்பனர்களையும், பொருளாதார ஆதிக்கத்தை செலுத்தும் பனியா கும்பலையும் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தமிழ் தேசியத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய இந்த தாழ்த்தப்பட்ட மக்களை, ” தலித் ” என்று அடையாளப்படுத்தி அவர்களை இந்திய தேசியத்தில் கரைக்க வைக்கும் வழிகளில் மிக முக்கியமானதாகவும் உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பண்டன் பட்டம் போகாமல் பறையர் பட்டம் போகாமல் சூத்திர பட்டம் போகாது. அதாவது தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் தான் துணை, பிற்படுத்தப்பட்டவர்களின் விடுதலைக்கு தாழ்த்தப்பட்டவர்கள் தான் துணை. இவர்கள் இருவரும் கைகோர்த்து என்னை யாரடா தாழ்த்தினான் என்னை யாரடா பிற்படுத்தப்பட்டவன் என்று ஆக்கினான் என்று கேள்வி எழுப்பும் பொழுது அங்கே நிற்பது பார்ப்பன பரதேசிகளாக இருப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக இந்த அறிவு ஜீவிகள் வேலை செய்கிறார்கள்.

இதனை நாங்கள் எத்தனை முறை கூறினாலும் அத்தனை முறையும் எங்களை சுயசாதி வெறியர்கள் என்று பட்டம் கொடுப்பீர்கள்… மகிழ்ச்சி…. எங்களை தலித் விரோதி என்பீர்கள்… மகிழ்ச்சி…. ஆனால் நாங்களோ பாசானத்தில் பூத்த புழுக்கள்…

இந்த இனம் விடுதலை பெற திராவிடம் ஒன்று மட்டுமே ஒரே தத்துவம் என்பதை ஏட்டில் மட்டும் எழுதி வைக்காமல் கடந்த 70 ஆண்டுகள் ஆட்சியில் அதனை கண்கூடாகவும் கண்டவர்கள். அந்த தத்துவம் உயிரோடு இருப்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சிலுவை ஏற தயாராக உள்ள கூட்டம் இது.

திராவிடம் மட்டுமே இந்த பாவப்பட்ட – பிற்படுத்தப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இஸ்லாமிய, கிறிஸ்துவ, இன்னும் பிற – பார்ப்பனர் அல்லாத மக்களுக்கான விடுதலை… மேய்ப்பர் !

ஒருவேளை இதை புரிந்து கொள்ளாமல், வெளுத்ததெல்லாம் பால் என்பதைப்போல, ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவில் பிறந்து விட்டதாலயே அவர்கள் கூறும் அனைத்தும் உண்மையே! திராவிடம் அவர்களை கைவிட்டு விட்டது! என்று நினைப்பீர்களேயானால்! தயவு கூர்ந்து உங்களுக்கு அறிவு நாணயம் என்று ஒன்று இருந்தால்,

கடந்த நூறு ஆண்டுகளில் இங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு பிரச்சனை என்று வந்தால் ஒரு பிற்படுத்தப்பட்டவனும் வந்து நிற்பது இல்லையா ? கருப்பு சட்டைகள் அணிபவர்களில் யாரும் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லையா ? அவர்களுக்காக கவிதாவது இல்லையா என்பதை அருள்பூர்ந்து யோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் !

  • நெய்வேலி அசோக்
    பொது செயலாளர் 
      தோழர் களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *