அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனே புகார் செய்யுங்கள்: வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்திய தமிழக அரசு
Tamilnadu

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனே புகார் செய்யுங்கள்: வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்திய தமிழக அரசு

Jul 15, 2026

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோருவது அல்லது லஞ்சம் பெறுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய பிரத்யேக வாட்ஸ்அப் சேவை எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, அரசு அலுவலகங்களில் பணிக்காக லஞ்சம் கோரப்பட்டாலோ அல்லது லஞ்சம் பெறப்பட்டாலோ, பொதுமக்கள் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு நேரடியாக புகார் அளிக்கலாம்.

புகார்களுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது பிற ஆதாரங்களையும் அனுப்பி தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு சேவைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், லஞ்ச ஒழிப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கவும், ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்கவும் இந்த சேவையை பொறுப்புடன் பயன்படுத்துமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *