தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணமா? விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 26 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்பு காவல்துறை தாக்குதலால் ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலின்படி, அருணாச்சலம் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்
மதுரையில் கந்துவட்டி கொடுமை: ரூ.2 லட்சம் கடனுக்காக பெண் தற்கொலை; கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்
மதுரை செல்லூர் பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பிரேமா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உறவினர்கள் ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்படி, மகளின் திருமணச் செலவுக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு பிரேமா, கலையரசி என்பவரிடம் ரூ.2
திருப்பூரில் பரபரப்பு: பணியில் இருந்த காவலரை தாக்க முயன்ற பாஜக நிர்வாகி கைது!
திருப்பூர் மங்கலம் சாலை, எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, செல்வம் மதுபோதையில் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது
