“அதிமுக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பு!” 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் பறிபோன சோகம்!
Tamilnadu

“அதிமுக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பு!” 152 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் பறிபோன சோகம்!

Jun 4, 2026

தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பிற்கு மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்றம் (Supreme Court) கடந்த 29.05.2026 அன்று அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி (Super Speciality) மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு (All India Quota) மாற்ற நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய அதிமுக (AIADMK) அரசின் முறையற்ற வாதங்களே இந்த பின்னடைவுக்குக் காரணம் எனத் திமுக (DMK) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

நீட் தேர்வும் காலியான 152 இடங்களின் பின்னணியும்!

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் நிலவி வரும் இந்த விவகாரத்தின் முக்கியப் புள்ளிவிவரங்கள் இதோ:

“கடந்த 2025-ஆம் ஆண்டு நீட் (NEET) தேர்வின் அடிப்படையில், தமிழ்நாட்டில் மொத்தம் 430 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் இருந்தன.

இதில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்காக 50% இடங்கள் (215 இடங்கள்) பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டன. ஆனால், முதல் கட்ட கலந்தாய்வில் வெறும் 63 இடங்கள் மட்டுமே நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையிலும் 152 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தன.”

திமுக அரசு தடுத்து நிறுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க வாதங்கள்!

கடந்த மே 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தேர்வுக் குழு இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறைவு செய்தது. இந்தச் சூழ்நிலையில், தமிழ்வாணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார்.

அதில் காலியாக உள்ள 152 இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் எனக் கோரினார். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 5, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போதைய திமுக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மிகத் திறமையாக வாதாடி அந்த 152 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர்.

அதிமுக அரசு பொறுப்பேற்ற பின் நேர்ந்த குளறுபடிகள்!

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி (EPS) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மே 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முறையான வாதங்களை முன்வைக்கத் தவறிவிட்டனர்.

மனுதாரர் தரப்பில் மேற்கோள் காட்டப்பட்ட ‘என். கார்த்திகேயன் விஸ் தமிழ்நாடு அரசு’ (N.Karthikeyan Vs State of Tamil Nadu) என்ற முக்கியத் தீர்ப்பு இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்பதை எடுத்துரைக்கத் தவறிவிட்டனர். மேலும், அகில இந்திய அளவிலான இரண்டாவது கட்ட கலந்தாய்வு இன்னும் நடைபெறவில்லை என்பதையும், மாநில இடங்களை ஒப்படைத்த பிறகு ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சரியான விளக்கங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அரசின் இந்த அலட்சியப் போக்கே தமிழக மாணவர்களின் 152 உயர் மருத்துவ இடங்கள் பறிபோக முதன்மைக் காரணமாக அமைந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *