
நம் வீடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும், பக்கத்து வீடு தான் முக்கியம்
ஈழம் ஈழம் என்று பேசி மதுரையை இழக்கிறோம்
மாரடிப்பதா மன்றாடுவதா என்று தெரியவில்லை இந்த தமிழ் நாட்டு அரசியல் சூழலை பார்த்து. இந்த நாட்டில் என்ன நடத்தாலும் பரவாயில்லை பக்கத்து நாட்டு விடயம் தான் முக்கியம், நான் தான் அவரோடு ஆயுத பயிற்சி எடுத்தேன், நான் தான் சாப்பிட்டேன், அதற்க்கு அந்த பக்கத்து நாட்டு காரன் தான் சாட்சி என்று ஈன தனமாய் காட்சியளிக்கிறது. ஊடகத்தை பார்த்தால் நாம் இந்த தமிழ் நாட்டில் உள்ளோமா இல்லை பக்கத்து நாடான ஶ்ரீ லங்காவில் உள்ளோமா என்ற கேள்வி எழும்புகிறது.
இது, நம் வீட்டில் பிணம் விழபோகிறது என்று தெரிந்தும் பக்கத்து வீட்டு செத்துப்போன ஆயாவுக்கு தான் நான் மருந்து வாங்க போவேன் என்பது போல உள்ளது.
ஆம், ஶ்ரீ லங்கா ஶ்ரீ லங்கா என்று பேசிக்கொண்டு இருக்கும் இந்த தருணத்தில், வலதுசாரி பார்ப்பன பனியா கும்பல் தான் முழு சக்தியையும் பயன்படுத்தி மதுரையை கைபற்றி உள்ளது !
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. மலையின் மறுபுறத்தில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா உள்ளது.இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பதும், அதனை தொடர்ந்து ஆடு, கோழி பலி கொடுத்து, விருந்து வைப்பதும் வழக்கம். கடந்த 1 ஆம் தேதி சந்தனக்கூடு விழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, 18ஆம் தேதி ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடைபெற உள்ளதாக தர்கா நிர்வாகம் அறிவித்தது.
இதற்கு சங் பரிவார் கும்பல் எதிர்ப்பு தெரிவிக்க, திராவிட மாடல் என்று சொல்லப்படும் (?) அரசின் அதிகார வர்கமும் தலையசைத்து, இந்த நிகழ்வுக்கு தடை ஆணை பிறப்பித்தார்கள். என்ன கொடுமை இது ?!
தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழாவும் கந்தூரி விழாவும் நடத்தப்படுவதாகக் கூறியும் அவர்களுக்குக் காவல் துறை அனுமதியளிக்கவில்லை. ஆனால், இந்த சங் பரிவார் கும்பல் என்ன சொன்னாலும் தலையாட்ட படும் ” சுத்தமான அக்கிரகாரமாக” மாறியுள்ளது திராவிட மாடல் அதிகாரிகள் ?!
தற்போது இது சம்பவம் வழக்குமன்றம் சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நடந்தும், நாம் அனைவரும் ஏதோ பக்கத்து நாட்டு பிரஜை என்பதுபோல நடந்துகொண்டு இருப்பது எந்த வகையில் நியாயம்?
கோவை முழு பார்ப்பன பனியா கைகளில் வந்த நிலையில், சங்க இலக்கிய புகழ் மதுரையையும் தாரைவாக்க போகிறோமா ?
நெய்வேலி அசோக்
பொது செயலாளர்
தோழர் களம்