
தேசிய தலைவர்பேரறிஞர் அண்ணாவின் சாதனைகள்:-
1967ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1969 பிப்ரவரி வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் தேசிய தலைவர் அறிஞர் அண்ணா.மிக குறுகிய கால ஆட்சியானாலும் மாநில சுயாட்சியிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பை தமிழ்நாட்டிற்காக ஆற்றினார். இன்றுவரை அவரது அந்த பங்களிப்பை வேறு எந்த முதலமைச்சர்களாலும் ஈடுசெய்ய முடியவில்லை.
அண்ணாவின் சாதனைகள்:-
கூட்டாட்சி : ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டினார்.
🔷சமூக நலம்: நியாயவிலைக் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 படி அரிசி திட்டம்.
🔷கல்வி : ஏழை மாணவர்களுக்கு பி.யூ.சி வரையில் இலவசக் கல்வி திட்டம்.
🔷கூட்டாச்சி : கல்வித்துறையில் முதல் மொழி தமிழ், இரண்டாம் மொழி ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை அமல்படுத்தினார்.
🔷உள்கட்டமைப்பு : ‘கூவம் மேம்பாட்டு திட்டம்’ அமல்படுத்தினார்.
🔷உள்கட்டமைப்பு : சென்னை குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் திட்டம்.
🔷உள்கட்டமைப்பு : சென்னை குடிசைவாசிகளின் வாழ்வு உயர 1 கோடி ரூபாய் திரட்டி நிதி உதவி செய்தார்.
🔷விவசாயம்: புன்செய் நிலங்களுக்கு நிலவரியை ரத்து செய்தார்.
🔷போக்குவரத்து : தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்குவதை தொடங்கினார்.
🔷ஆட்சி நிர்வாகம் : மனசாட்சியின் மீது ஆணையிட்டு பதவியேற்பதை தொடங்கினார்.
🔷ஆட்சி நிர்வாகம் : அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
🔷கல்வி : பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சி செய்ய நிதி வழங்கினார்.
🔷சமூகநீதி : சுயமரியாதை திருமணம் செல்லும் என அரசாணை உருவாக்கினார்.
🔷சமூகநீதி : கலப்பு திருமணம் செய்வோருக்கு ‘தங்க விருது’ வழங்கினார்.
🔷சமூகநீதி : ‘சீரணி’ எனும் சமூகசேவை அமைப்பு தொடக்கம்.
🔷சமூகநீதி : விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தார் .
🔷கூட்டாச்சி : தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக தமிழும் ஆங்கிலமும் ஏற்கப்பட்டது.
🔷கூட்டாச்சி : ‘ஆகாஷ்வாணி’க்கு ‘வானொலி’ என பெயர் மாற்றம் செய்தார்.
🔷கூட்டாச்சி : பள்ளி NCC அணியில் இந்திச் சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
🔷கூட்டாச்சி : ‘செக்ரடரியேட்’ பெயர் தலைமைச் செயலகம் என மாற்றினார்.
🔷கூட்டாச்சி : அரசு முத்திரையில், ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்-’க்கு பதிலாக தமிழ்நாடு அரசு, சத்யமேவ ஜெயதே-க்கு பதிலாக வாய்மையே வெல்லும் என்று மாற்றினார்.
🔷தமிழ் வளர்ச்சி & தமிழர் நலன் : சென்னையில் 2வது உலகத்தமிழ் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடித்தார் .
🔷தமிழ் வளர்ச்சி & தமிழர் நலன் : பேருந்துகளில் திருக்குறள் பொறிக்க செய்தார்.
🔷தமிழ் வளர்ச்சி & தமிழர் நலன் : சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு சிலை அமைத்தார்.
🔹தமிழ் வளர்ச்சி & தமிழர் நலன் : ஸ்ரீ எனும் சமஸ்கிருத சொல்லிற்கு பதிலாக திரு என்று தமிழ்ப்பெயர் வைத்தார்.
இத்தகைய சாதனை படைத்த தேசிய தலைவர் பேரறிஞர் அண்ணா இன்னும் என்றும் மக்கள் மனதில் நீங்காமல் வாழ்வார்..!
தமிழன். சு.கவின் குமார்
தலைமை நிலைய செயலாளர்
தோழர்களம்