
திராவிட பேரரசன் ஸ்டாலின் – உலகின் மூத்தக்குடி தமிழர்கள் தான் என்று அறிவியல் சான்றுகளோடு கூறிய தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் என்றோ பாடியது இன்று நிரூபணம் ஆகியிருக்கிறது
தமிழர்களாகிய நாம் இதை கொண்டாடி மகிழ வேண்டிய தருணம் இது, இனிப்புகளை எடுங்கள் நண்பர்களோடு உற்றார் உறவினர்களோடு பகிர்ந்து நம் பெருமையை உலகுக்கே சொல்லுங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடுபாறையில் நடந்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியாகி அதை இன்று நமது முதல்வர் நம்மோடு பகிர்ந்து கொண்டது மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டது
“தமிழ்” என்பதே பெருமை தான், அதிலும் 5300 ஆண்டுகளுக்கு முன்பு நமது அறிவியல் ஆளுமை, வாழ்வியல் முறை குறித்த துல்லியமான வரலாற்று ஆய்வுகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது எண்ணிலடங்கா வியப்பை தந்திருக்கிறது

உலகில் நம் மொழியை போல இலக்கண இலக்கிய செழுமை வேறெங்கும் இல்லை
தமிழர்கள் 5300 (கிமு 2172) ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பயன் படுத்தி இருப்பது கார்பன் டேட்டிங் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது
கார்பன்-14 ஐசோடோப்புகளின் கதிரியக்கச் சிதைவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இயற்பியல் மூலம், கதிரியக்க மூலக்கூறுகள் அணு எண் மற்றும் சிதைந்து வரும் அணுக்களின் நிறை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சிதைவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு பொருளின் வயதை கரிம காலக்கணிப்பு (carbon dating) முறையில் கண்டறியப்பட்டு அதன் வயதை சொல்லிவிட முடியும். அப்படி நம் தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி (Iron Age) இந்தியாவில் மிகப்பழமையான நாகரிகமாக விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பை நமது முதல்வர் கொடுத்து “இரும்பின் தொன்மை” என்ற நூலையும் வெளியிட்டு மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார் திராவிட பேரரசன். ஸ்டாலின், வாழக் தமிழ் !!