“மரண தண்டனை பயம் முதல் சபாநாயகர் ஆசனம் வரை!” – முதல்வர் விஜய் சொன்ன குட்டிக் கதை.
சென்னை | மே 12, 2026
தமிழகச் சட்டமன்றத் தலைவராக திரு. ஜே.சி.டி. பிரபாகர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் கையைப் பிடித்து அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர்.
இந்தச் சம்பிரதாயம் குறித்து முதல்வர் விஜய் ஆற்றிய உரையின் சிறப்பம்சங்கள்:
1. இங்கிலாந்து நாடாளுமன்ற மரபு:
“சபாநாயகரை கைப்பிடித்து இழுத்து வந்து அமர வைக்கும் இந்த மரபு இங்கிலாந்து நாடாளுமன்ற நடைமுறையிலிருந்து வந்தது. மன்னராட்சி காலத்தில், மன்னர் விரும்பும் விஷயங்களை நாடாளுமன்றம் நிராகரித்துவிடும். அதனை மன்னரிடம் கொண்டு போய் சொல்ல வேண்டிய துணிச்சலான பொறுப்பு சபாநாயகருடையது.”
2. தலை தப்பித்தால் போதும்!
“தன் முடிவை நாடாளுமன்றம் நிராகரித்த கோபத்தில், சபாநாயகருக்கு மன்னர் மரண தண்டனை கூட விதிப்பார். இதனால் சபாநாயகர் பதவிக்கு வர பலரும் பயப்படுவார்கள். சபாநாயகராக ஒருவரது பெயரை அறிவித்தால், ‘தலை தப்பித்தால் போதும்’ என்று அவர் ஓடிவிடுவார். அவரைப் பிடித்து வந்து கட்டாயப்படுத்தி அமர வைப்பதற்காகவே அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் கையைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். அதுவே இன்று வரை மரபாகத் தொடர்கிறது.”
3. அனைவரும் சமம்:
- “மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி என்றார் ஆபிரகாம் லிங்கன். அதைப்போல, இந்த ஆட்சியில் மக்கள் அதிக நன்மைகளை அடைய வேண்டும்.”
- “ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சியோ அல்லது அதிக உறுப்பினர்களைக் கொண்ட தவெக-வோ, சபையில் அனைவரும் சமமாகவே மதிக்கப்பட வேண்டும்.”
4. துணை சபாநாயகர் நியமனம்:
சபாநாயகராகப் பொறுப்பேற்ற ஜே.சி.டி. பிரபாகர், திரு. ரவிசங்கர் அவர்களைத் துணை சபாநாயகராக நியமிப்பதாக அறிவித்தார்.
