பணம் காட்டி மிரட்டினால் பணியமாட்டோம்” – இந்தி திணிப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
Tamilnadu

பணம் காட்டி மிரட்டினால் பணியமாட்டோம்” – இந்தி திணிப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

Jan 25, 2026

தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மற்றும் நிதிப் பகிர்வு தொடர்பாக மத்திய அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் திணிப்பு

மத்திய அரசு எப்படியாவது இந்தியைத் திணிக்க வேண்டும் என்பதில் துடியாகத் துடிப்பதாக முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். நேரடியாக இந்தியைத் திணிக்க முடியாத காரணத்தால், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் கொல்லைப்புற வழியாக அதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

₹3458 கோடி நிதி நிறுத்தம்: மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்!

தமிழ்நாடு இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாலும், இந்தி திணிப்பைத் தடுப்பதாலும், கல்விக்காகத் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்துப் பேசிய முதல்வர், “பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து போக நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

திராவிடப் பாரம்பரியத்தின் வழிவந்தவர்கள்

தமிழகத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மொழி உரிமையைக் காக்கத் தொடர்ந்து போராடுவோம் என்று கூறிய அவர், “நாம் அண்ணா, கலைஞர் போன்ற தமிழ் போராட்ட வீரர்களின் பரம்பரையில் வந்தவர்கள்” என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டினார். தன்னாட்சி உரிமையும், மொழிப் பற்றும் கொண்ட தமிழகம் இத்தகைய அடக்குமுறைகளைத் தகர்த்தெறியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *