நெய்வேலி நிலக்கரி நிறுவனம், விசுவேசுவரய்யா, G.D. நாயுடு:
நாம் இன்று அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் அவர் ஆராய்ந்து உருவாக்கியவையே !
உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப் படைத்த ஜெர்மன் நாட்டுத் தலைவர் ஹிட்லர் கண்டு வியந்த ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் !
அப்படிப்பட்ட ஒரு அறிவியல் விஞ்ஞானி, பள்ளிப்படிப்பை முடிக்காத தயாரிப்பாளர், தந்தை பெரியாரின் உற்ற நண்பர், இன்று பன்முகம் கொண்ட ஒரு தலைவருக்கு தமிழ்நாடு அரசு சரியான அங்கீகாரம் கொடுத்துள்ளது கோயம்புத்தூரில் !
ஆனால் அவருக்கு இன்னொரு மிக முக்கியமான அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
அது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தான் ! ஆனால் அதற்கு பதிலாக தமிழன் காவிரி நதிநீரை இழக்க காரணமாக இருந்த ஒரு கன்னட பார்ப்பனருக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது அந்த நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே !
பயண இலக்கிய மேதை என்று போற்றப்படக்கூடிய எழுத்தாளர் சோமாலே அவர்கள் 1960 ஆம் ஆண்டில் வெளியிட்ட ” நெய்வேலி” என்ற புத்தகத்தில், அவரும் ஜிடி நாயுடு அவர்களும், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் பலமுறை வந்திருந்ததாகவும், ஜிடி நாயுடு அங்கே தங்கி பல ஆய்வுகளை செய்து உதவினார் என்றும் பதிவிட்டுள்ளார்.
இப்பொழுது வருடத்திற்கு 16,000 கோடி நிகர லாபம் ஈட்டக்கூடிய ஒரு நிறுவனமாக மாறியுள்ளது அந்த இடம். அதற்குப் பின்னணியில் நிலம் கொடுத்த நீதி கட்சி தலைவர் ஜம்புலிங்க முதலியார் ( அவரது பெயரையும் ஒரு பார்ப்பானை கொண்டு நிரப்ப முயற்சித்தது ), ஆய்வுக்கு உதவியவர் ஜிடி நாயுடு.
ஆனால், இவையெல்லாம் மறுத்துவிட்டு, திராவிட மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருந்த குடகு மலைப்பகுதியை தமிழ்நாட்டுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தந்தை பெரியார் எவ்வளவோ கூறியும் அதனை இங்கிருந்த அன்றைய உதவாக்கரைகள் ஏற்கவில்லை. அப்பொழுது அந்த நிலைமையை சாதமாக பயன்படுத்திக் கொண்ட கர்நாடக பார்ப்பனர் விசுவேசுவரய்யா, அந்தப் பகுதியை கர்நாடகத்துடன் சேர்த்துக்கொள்ள வழிவகை செய்து கொடுத்தார், காவிரி நீரை தமிழன் இழந்தான்.
அப்படிப்பட்ட விசுவேசுவரய்யா அவர்களுக்கு நெய்வேலியில் சிலை இருக்கிறது, ஏனோ G .D.நாயுடு அவர்களுக்கு ஒரு சிலை கூட இல்லை !
தமிழன் என்றாலோ, பார்ப்பனர் அல்லாதார் என்றாலோ ஏனோ இந்த கட்டமைப்புக்கு கசக்குகிறது போல !
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்
அரசியல் செய்திகள்
