
தமிழ்நாட்டு அரசின் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் விஜய். தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) தரவுகளை வைத்து தவெகவை தோலுரிக்கும் கொ.ப.செ.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா போன்ற அறிவு ஜீவிகள் அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளையும் கற்பனை தரவுகளையும் தொடர்ந்து ஒரு கூட்டம் கண்மூடித்தனமாக நம்பி வருவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவதூறு பரப்பி வருகிறது இந்த தவெக கும்பல். ஆக இந்த கோமாளி கும்பலின் தரவுகள், கருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் என அனைத்திற்கும் பதில் கூறும் விதமாகவும், குறிப்பாக பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களின் தரவுகளை பற்றி பேசுவதாகவும் அமையும் இக்கட்டுரை.
கடந்த 2023ஆம் ஆண்டு “இந்தியாவில் குற்றங்கள் 2022” என்ற தலைப்பில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஒன்றிய ஏஜென்சிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவே NCRB கடைசியாக வெளியிட்ட அறிக்கை. 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கை இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்ற விகிதம் = (மொத்த குற்றங்கள் / மாநிலத்தின் பெண்கள் எண்ணிக்கை) × 100,000 என்ற சூத்திரத்தின் அடிப்படையிலேயே இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்கள் கணக்கிடப்படுகிறது. இது ஒரு லட்ச பெண்களுக்கு எத்தனை குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை காட்டுகிறது. எடுத்துக்காட்டாக ஒடிசா மாநிலத்தின் குற்ற விகிதத்தை கணக்கிடுவோம்.
ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மொத்த குற்றங்கள் = 23,818; ஒடிசாவின் பெண்கள் தொகை = 174.1 லட்சம் = 1 கோடி 74 லட்சம். இந்த தரவுகளின் அடிப்படையில் ஒடிசாவில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மொத்த குற்றங்கள் கணக்கிடப்பட்டால்: (23,818 / 17,410,000) × 100,000 = 136.8 என்ற குற்ற விகிதத்தை காட்டுகிறது. ஆக ஒடிசாவில் ஒரு லட்ச பெண்களில் சுமார் 137 பெண்கள் மீது குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது புலப்படுகிறது.
இவ்வாறு கணக்கிடப்பட்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் 2022 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நிகழும் மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவை: ஒடிசா (136.8), ஹரியானா (118.7), ராஜஸ்தான் (115.4), தெலங்கானா (104.7), ஆந்திரப் பிரதேசம் (96.2). யூனியன் பிரதேசங்களில் 144.3 என்ற குற்ற விகிதத்துடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது. ஆக தவெக தலைவர் விஜய் கூறியபடி பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் ஐந்து இடங்களில் இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை. முதல் பத்து இடங்களில் இருக்கிறதா என்று பார்த்தால், இல்லை. முதல் 15 மற்றும் 20 இடங்களிலும் இல்லை. தமிழ்நாடு, குறைந்த குற்ற விகிதம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்து, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட பட்டியலில் 22வது இடத்தில் இருக்கிறது. “28 மாநிலங்களின் 22வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்றால் எங்கள் தலைவர் விஜய் கூறியது போல இங்கு குற்றம் அதிகரித்து வருகிறது தானே” என்று பேசும் விஜய்யின் ரசிகர் கூட்டத்திற்கு ஒன்றை தெளிவு படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இந்த பட்டியலில் முதல் சில இடங்களில் இருந்தால் அந்த மாநிலங்களில் பெண்கள் மீது அதிக குற்றங்கள் நிகழ்கிறது என்று பொருள். இதுவே கடைசி சில இடங்களில் இருந்தால் அந்த மாநிலங்களில் பெண்கள் மீது குறைவான குற்றங்கள் நிகழ்கிறது என்று பொருள். Top in the list = bad performance of the state in crime reduction. Bottom in the list = good performance of the state in crime reduction என்பதை தவெக தோழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தரவுகளில் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மொத்த குற்றங்கள் 9,207 ஆகவும், பெண்கள் தொகை = 384.1 லட்சம் = 3 கோடி 84 லட்சம் ஆகவும் இருக்கிறது. இந்த தரவுகளின் அடிப்படையில் கணக்கிட்டால்: (9,207 / 38,410,000) × 100,000 = 23.96 ≈ 24.0. அதாவது, தமிழ்நாட்டில் ஒரு லட்ச பெண்களில் 24 பெண்கள் குற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதே இதன் பொருள். ஆகவே 24 என்ற குற்ற விகிதத்துடன் பட்டியலில் கடைசியாக இருக்கும் ஏழு மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது தமிழ்நாடு. இந்த ஏழு மாநிலங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இரண்டாவது பெரிய மாநிலமாக குஜராத் இருக்கிறது. மற்ற ஐந்து மாநிலங்களான நாகலாந்து, சிக்கிம், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதி அளவு கூட இல்லாத மாநிலங்களாகும். அவ்வாறு பார்க்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் பெண்கள் மீது நிகழும் குற்ற விகிதத்தில் கடைசியில் இருந்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. ஆக பெண்கள் மீது நிகழும் குற்றங்களை தமிழ்நாடு அரசு திரம்பட கட்டுப்படுத்தி இருக்கிறது என்பது இந்த தரவுகளின் மூலம் புலப்படுகிறது. மற்ற பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம் 9வது இடத்திலும், மகாராஷ்டிரா 15வது இடத்திலும், பீஹார் 21வது இடத்திலும் , மேற்கு வங்காளம் 19வது இடத்திலும், மத்திய பிரதேசம் 7வது இடத்திலும் இருக்கின்றன.
அடுத்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் விகிதத்தை பற்றி பேசுவதும் முக்கியம். காரணம், பெண்கள் மீது நிகழும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ஒரு மாநில அரசு எவ்வாறு செயல்பட்டுள்ளது எனபதை தீர்மானிக்கும் மற்றொரு முக்கிய அளவுகோலாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் விகிதம் திகழ்கிறது. குற்றப்பத்திரிக்கை என்பது ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்று போலீசார் விசாரணை முடித்த பிறகு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அதிகாரபூர்வ ஆவணம் ஆகும். இதில் குற்றம் பற்றிய விவரங்கள், குற்றவாளிகள் யார் என்று போலீசார் நினைக்கிறார்கள், சாட்சிகள், சான்றுகள் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். ஒரு மாநிலத்தின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் விகிதம் அதிகமாக இருந்தால் அந்த மாநிலங்களில் எல்லாம் காவல் துறை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என்று பொருள். 2022-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் விகிதம் அதிகமாக உள்ள ஐந்து மாநிலங்கள்: மேற்கு வங்காளம் (98.8%), தெலங்கானா (97.4%), உத்தரகாண்ட் (97.2%), ஆந்திரப் பிரதேசம் (96.5%), தமிழ் நாடு (94.0%). இந்த மாநிலங்களில் காவல்துறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுக்க அதிக உறுதியாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு 94 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஆக குற்றம் நடந்த பின்பு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக திறம்பட செயல்படக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது தமிழ்நாடு.
எனவே பெண்களுக்கு எதிராக குறைவான குற்றம் நிகழும் ஒரு மாநிலமாகவும் , குற்றம் நிகழாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படும் ஒரு மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் இந்த தரவுகள் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், தமிழ்நாட்டு அரசின் மீது பல அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். உண்மையாகவே பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நிகழ்த்தப்படும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களை பற்றியெல்லாம் விஜய் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காரணம், இவையெல்லாம் பாஜக ஆளும் மாநிலங்களாகும். இம்மாநிலங்களை பற்றியெல்லாம் பேசினால் தனது குஜராத் முதலாளிகளும் நாக்பூர் எஜமானர்களும் கோபித்துக் கொள்வார்கள் அல்லவா? தனக்கு கிடைக்கவேண்டிய நிதி நிறுத்தப்படும் அல்லவா? ED, IT, ரைடு என்ற பேரில் விஜயின் வீட்டு வாசல் கதவை தட்டுவார்கள் அல்லவா? ஆகவே தான், தன் முதலாளிகளின் கட்டளைக்கிணங்க பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்ற விகிகத்தை பற்றியெல்லாம் பேசாமல் மௌனம் காத்துவிட்டு, பெண்கள் குற்ற விகிகத்தில் 22வது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை முதல் இடத்தில் இருப்பது போன்று சித்தரித்து பேசுவது எவ்வளவும் பெரிய அயோக்கியத்தனம் தெரியுமா?
எனவே பெண்களுக்கு எதிராக குறைவான குற்றம் நிகழும் ஒரு மாநிலமாகவும் , குற்றம் நிகழாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படும் ஒரு மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் இந்த தரவுகள் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், தமிழ்நாட்டு அரசின் மீது பல அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். உண்மையாகவே பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நிகழ்த்தப்படும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களை பற்றியெல்லாம் விஜய் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காரணம், இவையெல்லாம் பாஜக ஆளும் மாநிலங்களாகும். இம்மாநிலங்களை பற்றியெல்லாம் பேசினால் தனது குஜராத் முதலாளிகளும் நாக்பூர் எஜமானர்களுக்கு கோபித்துக் கொள்வார்கள் அல்லவா? தனக்கு கிடைக்கவேண்டிய நிதி நிறுத்தப்படும் அல்லவே? ஐடி, ஈடி, ரைடு என்ற பேரில் விஜயின் வீட்டு வாசல் கதவை தட்டுவார்கள் அல்லவா? ஆகவே தான், தன் முதலாளிகளின் கட்டளைக்கிணங்க பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்ற விகிகத்தை பற்றியெல்லாம் பேசாமல் மௌனம் காத்துவிட்டு, பெண்கள் குற்ற விகிகத்தில் 22வது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை முதல் இடத்தில் இருப்பது போன்று சித்தரித்து பேசுவது எவ்வளவும் பெரிய அயோக்கியத்தனம் தெரியுமா?
இவ்வாறு உலகம் அறிந்த ஓர் உண்மையை திரித்துக் கூறி , தமிழ்நாட்டு அரசின் மீது பொய்யான அவதூறுகளை பரப்பியதன் மூலம், சீமான் போன்று முழுநேரமாக பொய்களை பரப்பும் ஒரு அரசியல் கோமாளியாக நிலைநாட்டிக் கொண்டுள்ளார் விஜய். . அவதூறுகளையும், பொய்யான தரவுகளையும் அள்ளி விடுவதில் தான் சீமானுக்கும், அண்ணாமலைக்கும் கொஞ்சம் கூட சளைக்காத ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் விஜய்.