
பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !
எஸ்.வி. வெங்கடராமன் ( பார்ப்பனர்) தெரு பெயர் – திராவிட முதல்வர் அறிவிப்பு !
” உங்களில் ஒருவனாக இருப்பேன் ” என்று கூறி 97% பார்ப்பனர் அல்லாத மக்களின் ஓட்டுகளை வாங்கி அரசமைத்த திராவிட முன்னேற்றக் கழகம், சில மாதங்களாக பார்ப்பன பாசத்திற்கு ஏங்குகிறதோ என்கின்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது.
பரந்தூர் விமான நிலையம், மேல்மா பிரச்சனை, டங்ஸ்டன் விவகாரம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நில பிரச்சினை, ஒப்பந்த ஊழியர்கள் சிக்கல் இன்று எத்தனையோ விவகாரங்களில் நம் பார்ப்பனரல்லாத முதல்வரை சந்தித்து விட வேண்டும் என்று மக்கள் நாள்தோறும் ஏங்கிக் கொண்டு சென்னையை நோக்கி வருகிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு நாள் முழுக்க திருமண மண்டபத்தில் அமர்ந்து விட்டு செல்வது மட்டுமே வாடிக்கையாக உள்ளது.
♦ ஆனால், திராவிட இயக்கத்தின் பரம எதிரியான பார்ப்பனர்களின் சங்கம், முதல்வரை சந்திக்க வேண்டும் என்று முதல் நாள் தீர்மானம் போடுகிறது, அடுத்த நாளே முதல்வர் அவர்களை அழைத்து முதல்வரின் வீட்டிலேயே சந்திக்கிறார்.

♦ இந்த ஆட்சி பெரியாருக்கு சமர்ப்பணம் என்று பேரறிஞர் அண்ணா தொடங்கி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று தொடர்ந்து இன்று நாங்கள் தான் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறோம் என்று பிரகடனம் ஏற்படுத்தும் முதல்வர்…. ஆனால் அந்த பெரியாரைப் பற்றி ஒருவர் அவதூறு பரப்புகிறார், அந்த நபருக்கு இது எந்த நடவடிக்கையும் இல்லை, ஏறத்தாழ தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அந்த நபருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள், நீதிமன்றமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி ஆணையிட்டுள்ளது, ஆனாலும் ஏனோ திராவிடம் உடல் அரசு இன்னும் கண்மூடி வாய்மூடி இருக்கிறது. அந்த நபருக்கு எதிராக போராட்டம் நடத்தும் தோழர்கள் மீது மட்டும் கைது நடவடிக்கை!
♦ இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல், சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறேன் என்கின்ற பெயரில் இந்து என்கின்ற மதத்தை அடையாளப்படுத்த மடிசார் கட்டிய ஒரு பெண்ணையும், மார்வாடி ஏசி மணி இந்த ஒரு பெண்ணையும் விற்க வைத்து பொங்கல் விழா கொண்டாடுகிறது மட்டுமல்லாமல்,
” தமிழ் புத்தாண்டு வாழ்த்து ” என்று சொல்லாடலை இந்த திராவிட மாடல் முதல்வரின் பொங்கல் வாழ்த்து இல்லை என்பது வேதனை.

♦ இப்போது, இது என்ன பிரமாதம் இன்னும் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் உள்ளது இன்று சினிமா டயலாக் வருமே, அதுபோல, தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும், பார்ப்பன கோஷ்டியை குஷி படுத்த வேண்டும், அவர்களின் பாசத்திற்குரிய நபராக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் என்னவோ, எஸ்.வி. வெங்கட்ராமன் என்ற பார்ப்பனரின் பெயரை ஒரு தெரு பெயராக கொண்டுவரப்படும் என்று பார்ப்பன கோஷ்டிகள் இடம் நேரில் சென்று உறுதியளித்துள்ளார்.
இது, திராவிட இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கும், தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கம் மீண்டும் வராது என்ற நம்பிக்கையில் இருக்கும் சாமானியனுக்கும் கொடுக்கப்படும் மிகப்பெரும் அவநம்பிக்கை என்பத்தோடு மட்டுமல்லாமல்,
இது பார்ப்பன அல்லாத இயக்கம் என்று பொதுமக்களிடம் நேரிலும், சமூக ஊடகங்கள் மூலமும் பெருமையுடன் பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு கடை மட்ட தொண்டனுக்கும் செய்யும் துரோகம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது ?
அந்த மூன்று சதவீத பார்ப்பன கோஷ்டி ஓட்டு போட்டு தான் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமைந்திருக்கிறதா என்பதை முதல்வர் சற்று யோசித்து செயல்பட வேண்டும்!
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்