மெரினா கடற்கரையில் கட்டுப்பாடுகள்: போராட்டம் அச்சத்தால் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
Tamilnadu

மெரினா கடற்கரையில் கட்டுப்பாடுகள்: போராட்டம் அச்சத்தால் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

Jul 23, 2026

சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல காவல்துறை தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளது.

இதன் காரணமாக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள அனைத்து முக்கிய நுழைவாயில்களும் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் விதிக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நிலைமையைப் பொறுத்து மறுபரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *