எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி; மேல்முறையீடு தள்ளுபடி
Tamilnadu

எ.வ.வேலு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி; மேல்முறையீடு தள்ளுபடி

Jul 15, 2026

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “அவர்தான் நீதிமன்றத்தில் வந்துவிட்டாரே… அப்படியிருக்கும்போது அவரை விசாரிக்கலாமே?” என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

விசாரணையின் போது, லுக் அவுட் நோட்டீஸின் அவசியம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதன் மூலம், எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, அரசியல் வட்டாரங்களிலும் சட்டத் துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *