தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? செங்கோட்டையன் இலாகா அதிரடி மாற்றம்! 23 அமைச்சர்களின் முழு விவரம்!
தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்கள் உட்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது இந்த 23 புதிய அமைச்சர்களுக்கும் துறைகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
செங்கோட்டையன் இலாகா மாற்றம்: நிதித்துறை யாருக்கு?
கடந்த முறை கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித் துறை வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அவரது துறை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் வசம் இருந்த நிதித்துறை மற்றும் ஓய்வூதியத் துறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இந்த முக்கியத் துறை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ என்.மேரி வில்சனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய 23 அமைச்சர்களின் துறைகள் முழுப் பட்டியல்:
- கே.ஏ.செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- என்.மேரி வில்சன் – நிதி மற்றும் ஓய்வூதியத் துறை
- ஸ்ரீநாத் – மீன்வளத் துறை
- எஸ்.கமலி – கால்நடை வளர்ச்சித் துறை
- சி.விஜயலக்ஷ்மி – பால்வளத்துறை
- ஆர்.வி.ரஞ்ஜித்குமார் – வனத்துறை
- வினோத் – வேளாண் துறை
- ராஜீவ் – சுற்றுச்சூழல், மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காலநிலை மாற்றம்
- பி.ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
- வி.காந்திராஜ் – கூட்டுறவுத் துறை
- மதன்ராஜ்.பி – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை (MSME)
- ஜெகதீஸ்வரி.கே – சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை
- ராஜேஷ்குமார்.எஸ் – சுற்றுலா துறை
- எம்.விஜய் பாலாஜி – நெசவு மற்றும் கைத்தறித் துறை
- லோகேஷ் தமிழ்ச்செல்வன் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை
- விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத் துறை
- ரமேஷ் – இந்து சமய அறநிலையத் துறை
- பெ.விசுவநாதன் – உயர்க் கல்வித் துறை
- குமார்.ஆர் – செயற்கை நுண்ணறிவு (AI), தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய சேவை
- தென்னரசு.கே – அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை
- வி.சம்பத் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- முகமது ஃபர்வாஸ் – தொழிலாளர் நலன் துறை
- டி.சரத்குமார் (டி.சம்பத் குமார்) – மனிதவள மேம்பாட்டுத் துறை
- விக்னேஷ்.கே – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
ஏற்கனவே பதவியேற்ற 9 அமைச்சர்களின் துறைகள்:
கடந்த 16-ஆம் தேதி 9 அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டன. அந்த விவரம் வருமாறு:
- புஸ்ஸி ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
- ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை
- அருண் ராஜ் – சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை
- வெங்கட் ரமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
- நிர்மல் குமார் – மின்சாரம் மற்றும் சட்டத் துறை
- ராஜ்மோகன் – பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை
- டி.கே.பிரபு – சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை
- கீர்த்தனா – தொழில் துறை மற்றும் முதலீட்டு மேம்பாடு
இன்றைய புதிய விரிவாக்கத்தின் மூலம், தமிழக அமைச்சரவையின் மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
