தமிழக அமைச்சரவை அதிரடி விரிவாக்கம்: 23 புதிய தவெக எம்.எல்.ஏ-க்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்பு!
தமிழக அரசியல் களத்தில் இன்று மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 23 எம்.எல்.ஏ-க்களை அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் விஜய் பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரைக்குத் தமிழக ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
ராஜ் பவனில் இன்று காலை நடக்கும் பதவியேற்பு விழா
இதற்கான அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு சென்னை லோக் பவனில் (ராஜ் பவன்) இருந்து வெளியிடப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பதவியேற்பு விழா இன்று (21.05.2026) வியாழக்கிழமை காலை 10:00 மணிக்குச் சென்னையில் உள்ள லோக் பவனில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகையில் நடக்கும் இந்த விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவியேற்பு பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
புதிய அமைச்சர்களின் முழுப் பட்டியல் (தொகுதிகளுடன்):
அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்கும் 23 தவெக அமைச்சர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- ஸ்ரீநாத் (தூத்துக்குடி)
- கமலி. S (அவிநாசி)
- C. விஜயலட்சுமி (குமாரபாளையம்)
- R.V. ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)
- வினோத் (கும்பகோணம்)
- ராஜீவ் (திருவாடானை)
- B. ராஜ்குமார் (கடலூர்)
- V. காந்திராஜ் (அரக்கோணம்)
- மதன் ராஜா. P (ஒட்டப்பிடாரம்)
- ஜெகதீஸ்வரி. K (ராஜபாளையம்)
- ராஜேஷ் குமார். S (கிள்ளியூர்)
- M. விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)
- லோகேஷ் தமிழ்செல்வன். D (ராசிபுரம்)
- விஜய் தமிழன் பார்த்திபன். A (சேலம் தெற்கு)
- ரமேஷ் (ஸ்ரீரங்கம்)
- P. விஸ்வநாதன் (மேலூர்)
- குமார். R (வேளச்சேரி)
- தென்னரசு. K (ஸ்ரீபெரும்புதூர்)
- V. சம்பத் குமார் (கோயம்புத்தூர் வடக்கு)
- முகமது ஃபர்வாஸ். J (அறந்தாங்கி)
- D. சரத்குமார் (தாம்பரம்)
- N. மேரி வில்சன் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்)
- விக்னேஷ். K (கிணத்துக்கடவு)
இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் முக்கியத்துவம்!
அதிமுக கோஷ்டிகளின் முட்டுக்கட்டைகள் மற்றும் பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு மத்தியில் இந்த அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி எனத் தமிழகத்தின் அனைத்து மண்டலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆர்.கே நகர் எம்.எல்.ஏ மேரி வில்சன், தாம்பரம் சரத்குமார், வேளச்சேரி குமார் ஆகிய சென்னை மற்றும் புறநகர் பகுதி எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விளம்பர அரசியலை விடுத்து வலுவான நிர்வாகத்தை நோக்கி தவெக அரசு எடுத்துள்ள இந்த முக்கிய நகர்வு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
