இனி ‘மராத்தி’ தெரிந்தால் மட்டுமே ஆட்டோ, டாக்ஸி ஓட்ட முடியும்! – மகாராஷ்டிர அரசின் புதிய நிபந்தனை
National

இனி ‘மராத்தி’ தெரிந்தால் மட்டுமே ஆட்டோ, டாக்ஸி ஓட்ட முடியும்! – மகாராஷ்டிர அரசின் புதிய நிபந்தனை

Apr 29, 2026

மும்பை | ஏப்ரல் 29, 2026

மகாராஷ்டிராவில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசுவதைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் சிறப்பு நடவடிக்கைகளை மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • சிறப்புச் சோதனை: வரும் மே 1 (மகாராஷ்டிர தினம்) முதல் ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) வரை மாநிலம் முழுவதும் சிறப்புச் சோதனைகள் நடத்தப்படும். இதற்காகத் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • கட்டாயப் பயிற்சி: மராத்தி மொழி சரளமாகப் பேசத் தெரியாத ஓட்டுநர்களுக்கு, அந்தந்தப் பகுதி RTO (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்) மூலமாக மராத்தி மொழிப் பயிற்சி வழங்கப்படும்.
  • சான்றிதழ் கட்டாயம்: பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் ஓட்டுநர்களுக்குத் தனியாகச் சான்றிதழ் வழங்கப்படும். இனி வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமத்தை (Driving License) புதுப்பிக்க இந்த ‘மராத்தி மொழிச் சான்றிதழ்’ சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
  • நோக்கம்: உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதோடு, பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தைச் சீர்செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்களின் எதிர்வினை:

அண்டை மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடி வந்து மும்மையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு இது பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. எனினும், “நாங்கள் வாழும் மண்ணின் மொழியைக் கற்பதில் தவறில்லை” என்று ஒரு தரப்பினரும், “மொழிப் பிரச்சினை வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடாது” என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *