
காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !
தோழர் திருச்சி சிவா ஆற்றிய உரையில் மிக சிறிய அளவிலான அதுவும் எந்த ஒரு உள் எண்ணமும் இல்லாமல் எதார்த்தமாக காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி அறை தேவைப்பட்டது என்று கூறியது, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டது.
திராவிட இயக்கத்தவர்களும், காமராஜர் ஆதரவாளர்களும் பொம்மலாட்ட பொம்மைகளாக (puppets) பயன்படுத்தப்பட்டனர் தேர்தல் வியுக அமைப்பாளர்கள் மூலம் !
ஒன்றை யோசித்துப் பாருங்கள், இப்படி ஒரு நிகழ்வு வரும் வரை 99% உங்களுக்கு காமராஜர் பற்றி விமர்சிக்க வேண்டும் என்கிற எண்ணமே இருந்திருக்காது ! ஆனால் திடீரென, பல மீடியா சேனல்களில் திருச்சி சிவா மற்றும் காமராஜரை பற்றிய துணுக்கு செய்திகள் கசிய விடப்பட்டன. பல புத்தகங்களின் அடிக்கோடுகள் திடீரென புகைப்படங்களாக கிடைக்கப்பெற்றன, சில பல காணொளிகள் பகிரப்பட்டன. மீம்ஸ் பக்கங்கள், paid பக்கங்கள் எல்லாம் இதைப் பற்றிய செய்திகள். இவை எல்லா ஏதோ சுயாதிகமாக நடக்கவில்லை.
தேர்தல் வியூக அமைப்பாளர்கள், பி ஆர் ஏஜென்சிஸ், அறிவு ஜீவிகள் கூட்டமைப்பு (think tankers)போன்றவை அரங்கேற்றிய ஒரு பொம்மலாட்டம் ( A political puppet show).
செய்தி ஊடகங்களில் அமர்ந்து பேசியவர்கள் அரசியல் கலைஞர்கள் ( political actors by political parallelism)
இதன் விளைவாக ஒரு கூட்டு மனோபாவம் (mob mentality)உருவாக்கப்பட்டது ! என்ன ஆனது அல்லது என்ன நடந்திருக்கும் என்பதை பற்றி யோசிக்காமல் emotional ஆக செயல்பட ஆரம்பிக்கப்பட்டது !
அதன் தொடர்ச்சியாக, சமூக ஊடகங்களில் குழப்பங்கள் ( Social media Chaos)ஏற்படுத்தும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது !
சாதாரண குழப்பமாக இல்லாமல், ஒன்றிணைக்கப்பட்ட சமூக ஊடகக் குழப்பம் ( Synchronized social media Chaos) ஆக மாறியது.
நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த திராவிட மடல் முதல்வர் இந்த நிகழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். ( End card for the turmoil)
நிச்சயமாக, இது காமராஜர் அல்லது திராவிட சிந்தனையாளர்களின் போராட்டம் அல்ல. இது ஒரு நரேட்டிவ் விளையாட்டு!
இந்த நரேட்டிவ் ஏன் நடந்தது என்று தெரியுமா ? இதற்குப் பின்னால் யார் இருந்தது என்று உங்களுக்கு தெரியுமா ? நீங்கள் சுயாதீனமாக யோசித்தீர்கள், அல்லது செயல்பட்டீர்கள் என்று உங்களால் உறுதி இட்டு சொல்ல முடியுமா ?
விஜய் CM candidate என்று சொன்னவுடனேயே, திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது! இதனைத் தகர்க்க சில தேர்தல் வியூம் நடைபெறுகிறது! அதன் விளைவே இது ! ஒவ்வொரு சாதிகளையும் திராவிட இயக்கத்தில் இருந்து அப்புறப்படுத்த இந்த தேர்தல் வியூகம் நடைபெறுகிறது !
ஒரு துணுக்கு செய்தி தருகிறேன் ! இந்த மொத்த நிகழ்வுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் பின்புறம் கொண்ட ஒரு தேர்தல் வியூக நபர் உள்ளர் ! அவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் !
கணிக்க முடிகிறதா ? !
நெய்வேலி அசோக்
பொதுச் செயலாளர்
தோழர் களம்