ஐந்தாம் ஆண்டு குழந்தைகள் தின விழா: மூலக்கழனியில் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி பங்கேற்பு !

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூலக்கழனி கிராமத்தில் உள்ள SPAC ஹாலில், உதவும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் அசட் (ASSET) அமைப்பு சார்பில், ஐந்தாம் ஆண்டு குழந்தைகள் தின விழா மற்றும் ஆதிவாசிகளின் தலைவர் பிர்சா முண்டா பிறந்தநாள் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
காயரம்பேட்டில் இயங்கி வரும் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் இயக்குநர் டி. சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
கல்வாயில் இயங்கி வரும் ஆதிவாசி சமூக சேவை கல்வி அறக்கட்டளையின் (அசட் அமைப்பு) இயக்குநர் எம். சொர்ணலதா அனைவரையும் வரவேற்று, இந்திய அரசியலமைப்பு முகப்புரையை வாசித்தார்.
ஆதிவாசிகளின் தலைவர் மறைந்த பிர்சா முண்டா அவர்களின் திருவுருவப் படத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரும், வி.சி.க.வின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான எஸ். எஸ். பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விழா சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் :
திருமதி. பிரிஸ்லா ராணி அவர்கள் .
இயக்குனர் Save the Childran
திரு. சந்திரசேகர் அவர்கள்
நிர்வாக இயக்குனர்,Savenman media Solision / Zevenstone Pvt.Lid
திருமதி. நிதிமா ரோஸ்லின் அவர்கள்
உரிமையாளர், ரோஸ் எண்டர்பிரைஸஸ்
பிலிப் ஆசீர்வாதம் அவர்கள்
இணக்குனர். களஞ்சியம் சாரிடபில் டிரஸ்ட்
திரு. பிரேம்குமார் அ
தலைமை அறங்காவலர், DEEP
திரு. வின்சன்ட் ஜெபசிங் அவர்கள்
இணை நிறுவனர். Savenman media Solision / Zevenstone Pvt.Lid
திரு. K.கருணாகரன் அவர்கள் .
விசிக ஊராட்சி செயலாளர், மேல்கல்வாய்.
திரு. P.தென்பாண்டியன்
வழக்கறிஞர், நிறுவனர், மக்கள் உரிமை கழகம்
திரு. P.அசோக்குமார்
வழக்கறிஞர், உயர்நீதி மன்றம், சென்னை.
திருமதி. R.தமிழ்ச்செல்வி
அறங்காவலர், உதவும் கரங்கள் அறக்கட்டளை, காயரம்பேடு.
திரு. N.தெய்வேந்திரன்
அறங்காவலர், உதவும் கரங்கள் அறக்கட்டளை, காயரம்பேடு.
திரு. D.தினேஷ்குமார் அவர்கள்
அறங்காவலர், உதவும் கரங்கள் அறக்கட்டளை
திரு. S.சதிஷ்குமார் அவர்கள்
அறங்காவலர், உதவும் கரங்கள் அறக்கட்டளை
திரு. ஏ.மாரி
வி.சி.க. இ.பாசறை. மேல்கல்வாய்
, சமூகத் தலைவர்கள், சி.சி.எஃப்.எஃப். பொறுப்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
, பழங்குடியினப் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அவற்றைக் கையாளும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினர்.

பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள்
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள், குழந்தைகளுடன் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 350-க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகளுக்குத் தலா 500 ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புறப் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, தமிழரின் பறை இசையைப் போற்றும் விதத்தில் பறை இசை கலைக்குழுவினர்களால் எழுச்சியூட்டும் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கலந்துகொண்ட அனைவருக்கும் அசைவ அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் நன்றி
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் உதவும் கரங்கள் அறக்கட்டளை மற்றும் அசட் அமைப்பு சார்பில் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த அசட் அமைப்பின் இயக்குநர் சொர்ணலதாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலேயே ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தின விழாவை இந்த அமைப்பு மூலம் வெகு சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதியாக, CCFF செயலாளர் பாண்டூர் எஸ். நாகசுந்தரி நன்றி தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட அளவில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ/மாணவிகள் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
அரசியல் செய்திகள்
