தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.
Politics

தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.

Jan 20, 2025

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று விஜய் அங்கு போராடி வரும் மக்கள் யாரையும் நேரடியாக சந்திக்காமல் தன்னுடைய கேரவனில் நின்றபடியே சினிமா வசனங்களை பேசி பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது எஜமானர் மோடியின் பாணியில் விஜய்யும் ஒரு ரோட் ஷோவை (Road Show) நடத்தியுள்ளார். மக்களிடத்தில் பல பொய்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். தன்னுடைய நாக்பூர் முதலாளிகள் மனம் காயப்படாத படி விஜய் பேசியிருப்பது, விஜய்யின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

இந்த பனையூர் பண்ணையார் அவர்கள் முதலில் போராட்டக் குழுவினரை பரந்தூருக்கு அருகில் அமைந்துள்ள “வீனஸ் ரிசார்ட்டில்” தான் சந்திப்பதாக இருந்தது. இதற்கான அனுமதி கோரும் கடிதத்தை தவெக சார்பில் கட்சியின் பொருளாளர் வெங்கடரமணன் அவர்கள், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினார். அனுமதி அளிக்கப்பட்ட பின் தவெகவினர் வீனஸ் ரிசார்ட்டில் தங்கள் தலைவரை வரவேற்பதற்காக அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்தனர். காவல் துறை சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் பரந்தூர் போராட்டக் குழுவினர் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஊரை விட்டு வெளியே வந்து விஜயை சந்திக்க மறுத்தனர். மேலும் விஜய் தங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும்‌ என்ற கோரிக்கையை வைத்தனர். இதனால் நேற்று இரவு, ஏகணாபுரம் அம்பேத்கர் திடலில் வைத்து விஜய் மக்களை சந்திப்பதற்காக தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால்‌ காவல் துறையினர் கடைசி நேரத்தில் இடத்தை மாற்ற முடியாது, மேலும் அவ்வாறு மாற்றினால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறி, அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். அதிக அளவில் ரசிகர்களை கொண்ட விஜய்‌ போன்ற ஒரு நடிகர் மக்களை நேரில் சந்திக்க வேண்டுமானால், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் ஒரே இரவில் செய்து முடிப்பது என்பது சாத்தியமற்றது. ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர் கூட்டத்தில் நடந்தது இங்கு நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே விஜய், அம்பேத்கர் திடலில் வைத்து மக்களை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் விஜய், இதை சுட்டிக்காட்டி, மாநில அரசு, தான் மக்களை நேரில் சந்திப்பதற்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது என்பது போல பேசியுள்ளார். உண்மையாக நடந்தது என்ன என்பதை‌ மக்களிடம் கூறாமல், மக்களை நேரில் சந்திப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததற்கு சாக்கு சொல்லும் விதமாகவே மாநில அரசின் மீது இந்த பலியை சுமர்த்தியிருக்கிறார் நமது அரசியல் அயோக்கியர் விஜய் அவர்கள்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழ்நாடு அரசின் திட்டமாக விஜய்யும் அவரது தற்குறி தம்பிகளும் மக்கிளிடத்தில் பரப்பி வருகின்றனர். ஆனால் இது ஒன்றிய அரசின் ஒரு திட்டம். ஒன்றிய அரசின் ஆணைப்படி, மாநில அரசு விமான நிலையம் அமைப்பதற்காக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்த இடங்களில் இருந்து ஒரு இடத்தை தேர்வு செய்து அதை அமைச்சகத்திடம் கொடுக்க வேண்டும். இதைத் தான்‌ தமிழ்நாடு அரசும் செய்தது. ஆக, விஜய் கேள்வி கேட்டு, போராட்டம் நடத்த வேண்டியது டெல்லி சென்று ஒன்றிய அரசுக்கு எதிராக, ஆனால் தன் தற்குறி தம்பிகளை திரட்டிக் கொண்டு, ரோட் ஷோ நடத்தி, மக்களை முட்டாளாக்கி அவர் மாநில அரசின் மீது மேலும் ஒரு பலியை சுமத்தியிருக்கிறார். காரணம் ஒன்றிய அரசை கேள்வி கேட்டால் தன் முதலாளிகள் கோபித்துக் கொள்வார்கள், அடுத்த நாள் தன் வீட்டுக்கு வருமானவரித்துறை சோதனை வரும். எனவே பலியை தூக்கி மாநில அரசின் மீது போட்டிருக்கிறார் நமது அரசியல் அயோக்கியர்.

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு, பரந்தூர் திட்டத்திற்கு மட்டும் ஆதரவா? என்று மாநில அரசை பார்த்து கேட்ட இந்த விஜய் தான், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்திற்கு ஆதரவாக தங்களது செயற்குழுவில் ஒன்றிய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியவர். தூத்துக்குடி மாவட்டத்தில் மணப்பாடு அருகிலுள்ள மீனவ கிராமங்களில் வசிக்கும் மக்கள், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசு, இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, பிறகு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த ராக்கெட் ஏவுதளம் திட்டத்திற்காக குடியிருப்பு பகுதிகளை தேர்ந்தெடுப்பது தவறு என்றும், திட்டத்தின் விரிவாக்கம் செய்யப்படும் போது சுற்றுவட்டார கிராமங்கள் அழிக்கப்படும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். இப்படி மக்கள்‌ மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய இத்திட்டத்திற்கு எதிராக பேசாமல், தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசை பாராட்டி தனது சங்கித்தனத்தை நிருபித்துக் கொண்டிருக்கும் இந்த விஜய் தான் இயற்கை வள பாதுகாப்புக்கு ஆதரவானவரா?

தனது எஜமானர் மோடி போலவே தானும் தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளர்களை சந்திக்கவே கூடாது என்று தீர்மானம் எடுத்துள்ளார் போல நமது பனையூர் பண்ணையார். இவர் கேரவனில் வந்து கொண்டிருக்கையில் கேரவனை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விஜய், அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தார்‌. தனக்காக பல மணி நேரம் காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் குறைந்தது ஒரு நன்றி கூட சொல்ல மனமில்லாதவர் தான் நாளை தமிழ்நாட்டை ஆளப்போகிறார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர் தற்குறி தம்பிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *