
UGC செயல்பாடுகள் – கல்விக்கு தொடர்பில்லாத ஆளுமைகளை கொண்டு மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் செயல்
அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள ஒத்திசைவு பட்டியலில் 25 ஆவது வரிசையில் பல்கலை கழகங்கள் உள்ளது. அதாவது பல்கலை கழக விஷயங்களில் மாநிலம் மற்றும் ஒன்றிய அரசுகள் இருவருக்கும் அதிகாரம் உள்ளது என்பதே ஒத்திசைவு பட்டியல் (Concurrent List)
இதற்கு நேரெதிராக மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் விதமாக யுஜிசி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
ஆளுநரின் அதிகாரங்களை விரிவு படுத்தி துணை ஆளுநர் நியமிப்பிலும் மூன்று நபர் குழுவை ஆளுநரே நியமிக்கும் இந்த புதிய சட்ட முன்வடிவம் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கே வேட்டு வைக்கும்
அறிவுசார் தளத்திலும் பார்ப்பனிய மேலாதிக்கம் ஓங்கிட இது போன்ற குழப்பமான சட்டங்களை கொண்டு வருவது பாஜகவிற்கு ஒன்றும் புதிதல்ல. குடியுரிமை திருத்த மசோதா (CAA), விவசாய மசோதாக்கள், சுற்றுப்புற சூழல் சீர்திருத்த மசோதா (EIA), முத்தலாக் தடை சட்டம், தேர்தல் ஆணையர் நியமனம் என்று பல சட்டங்களை கொண்டு வந்து பெரும்பான்மை மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி ஒரு சாரார் மட்டும் (பார்ப்பனர்கள்) பயன்பெறும் நோக்கம் ஆளும் ஒன்றிய அரசிற்கு
இதற்கு வலுசேர்க்கும் இன்னொரு
அறிவிப்பை யுஜிசி வெளியிட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை பின்பற்றாத மாநிலங்களில் பல்கலை கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்று சொந்த நாட்டு மக்களின் கல்வி முறையில் அரசியல் ரீதியான தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது மோடி அரசு
இப்படி திரும்பிய திசையெல்லாம் மக்களை, மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு யுஜிசி மூலமாக அறிவுஜீவிகள் தளத்தையும், அறிவியல் தளத்தையும் காவி நிறமாக்க துடிக்கிறது. இது இந்தியாவின் அடிநாதத்தை ஆணிவேரை அசைத்து பார்ப்பதற்கு சமம், அதையும் மக்களாட்சி மூலமாக செய்வது தான் நிகழ்கால பாசிசம்