Udhayanithi Stalin: “இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!” – தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள், ரத்ததான நிகழ்வுகள் மற்றும் “என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்களின் செயல்பாடுகளுடன் கொண்டாடப்பட இருப்பதை அறிவித்துள்ளார். இதற்காக கழகத்தினரிடமும் இளைஞர் அணித் தோழர்களிடமும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
உதயநிதி, பிறந்தநாள் விழாவை திராவிட இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் விழாவாக மாற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் பட்டாசுகளை தவிர்க்குமாறு கழகத்தினரிடம் உரிமையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மக்களுக்கு சேவை செய்வதில் முனைப்புடன் செயல்பட இளைஞர் அணியை உற்சாகப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்பதிவை மேற்கொண்டு திராவிட மாடல் அரசின் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து உறுதியாக செயல்பட வேண்டுமென கழகத்தினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவே தனது பிறந்தநாள் விழாவின் பிரதான வேண்டுகோளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
