நம்பர் 1 திராவிட மாடல் ஆட்சி! அதற்கு தமிழ்நாட்டின் மின்சார வாகன உற்பத்தியே சாட்சி!
Politics

நம்பர் 1 திராவிட மாடல் ஆட்சி! அதற்கு தமிழ்நாட்டின் மின்சார வாகன உற்பத்தியே சாட்சி!

Jan 14, 2025

தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மஹிந்திராவின் அதிநவீன எஸ்.யு.வி (SUV) கார்களை நேற்று (13/01/2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டது மஹிந்திரா நிறுவனம். இந்த கார்களை தமிழ்நாடு அரசுப் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்ற, திரு. வேலுச்சாமி உள்ளிட்ட சிறந்த பொறியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

“மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில் தான் நடைபெற வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கம். மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில் தான் நடைபெறுகிறது. இதில் அதிகமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.

“சென்னை – ஆசியாவின் டிட்ராய்ட்” என்ற பெயருக்கு சாட்சியாக தமிழ்நாடு, இந்தியாவின் மின்சார வாகன (EV) தலைநகரமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் விற்கப்படும் மின்சார கார்களில் 40‌ சதவீதமும், மின்சார இரு சக்கர வாகனங்கள் 70‌ சதவீதமும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

EV30@30 என்ற ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டுக்குள் விற்பனை செய்யப்படும் மொத்த வாகனங்களில் 30% மின்சாரமாக இருக்க இந்தியா இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். இன்றைய நிலையை வைத்துப் பார்த்தால் 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களில் 35% தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

2023 ஆண்டில் தமிழ்நாட்டின் மின்சார வாகனக் கொள்கை வெளியிடப்பட்ட பிறகு, தமிழ்நாடு, மின்சார வாகன துறையில் பெரும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதில் மிக முக்கியமான முதலீடுகள், முன்னேற்றங்கள் கீழ்க்கண்டவாறு:

2021 ஆம் ஆண்டு தன்னுடைய உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு மோட்டார்ஸ், 2024ல் மீண்டும் தமிழநாட்டில் தனது EV திட்டங்களுடன் திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளது, முக்கியமான முன்னேற்றங்களில்‌ ஒன்றாக கருதப்படுகிறது‌. மேலும், வியட்நாமின் மின்சார வாகன உற்பத்தியாளர் விந்பாஸ்ட், புதிய தொழிற்சாலை அமைக்க 2 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளது.

ரெனால்ட் நிசான் சென்னையிலுள்ள தனது‌ தொழிற்சாலையை மேம்படுத்த ரூ. 5,300 கோடி முதலீடு செய்து மின்சார வாகன உற்பத்திக்குத் தயாராகியுள்ளது.

2024ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய மின்சார வாகன முதலீட்டு உறுதிப்பாடுகள் கிடைத்துள்ளன. இதில் டாடா மோட்டார்ஸ்ஸின் ரூ. 9,000 கோடி, விந்பாஸ்டின் 2 பில்லியன் டாலர், ராயல் என்ஃபீல்டின் ரூ. 3,000 கோடி, ஹூண்டாய் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய நிறுவனங்களின் ரூ. 2,000 கோடி முதலீடுகள் அடங்கும்.

ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் மின்சார வாகன மையம் (EV Hub) அமைப்பதற்காக ரூ. 10,000 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன மையத்தை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது புதிதாக 3000 வேலைவாய்ப்புகளையும் உருவாகியுள்ளது.

இதே போல உலகின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாவதாக இருக்கக் கூடிய டெஸ்லா தமிழ் நாட்டில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவிலிருந்து மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்த முதல் பன்னாட்டு கார் உற்பத்தியாளராக சிட்ரோன், 2024ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து E-C3 மாடல்களை சர்வதேச சந்தைக்கு அனுப்பியது. இது தமிழகத்தின் மின்சார வாகன ஏற்றுமதித் திறனில் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

இவையெல்லாம் தமிழ்நாட்டை உலக மின்சார வாகன நிறுவனங்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய இடமாக உருவாக்குகிறது.

இப்படி உற்பத்தி நிறுவனங்களின் முதன்மையான விருப்பமாக தமிழ்நாடு இருப்பதற்கான காரணம் தமிழ்நாடு அரசு பின்பற்றும் “பிளக் அண்ட் ப்ளே” முறை( Plug and Play approach). “ஒரு நிறுவனம் தமிழ்நாட்டிற்குள்ளே வர முடிவு செய்தால், சில மாதங்களுக்குள் அல்லது அதிகபட்சம் ஒரு ஆண்டுக்குள், அந்த நிறுவனங்களுக்கான தொழில்முகாமை அமைத்து செயல்பட ஆரம்பிக்கலாம். அதே நேரத்தில், அந்நிறுவனங்கள் இங்கு செயல்படுவதற்கான வசதிகளும் உருவாக ஆரம்பிக்கும்.

தமிழ்நாடு மின்சார வாகனங்களுக்கான முன்னணி மாகாணங்களில் முதன்மையாக நிகழ்வதற்கான மற்றொரு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட “நான் முதலவன் திட்டம்”. இந்தத் திட்டத்தின் நோக்கம், தொழில் நுட்ப இடைவெளிகளை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சிகளை வழங்கும் திறமையான பயிற்சியாளர்களை கண்டறிதல் ஆகும். அப்படி கண்டறியப்பட்ட பயிற்ச்சியாளர்கள், இன்று மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்‌.

தமிழ்நாட்டின் தொழிற்பயிற்சி நிலையங்கள் இப்போது உலகத் தரத்தில் உள்ளன. தமிழ்நாட்டு மாணவர்கள் நவீன தொழில் நுட்பத்தில் பயிற்சிபெற்று, தொழில்துறையின் தேவை உருவாகுவதற்கு முன்னரே அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தயார் படுத்தப்படுகின்றனர்.

ஆகவே தமிழ்நாட்டு மாணவர்களின் மேம்பட்ட திறன்களை கண்டு, முதலீட்டாளர்கள், நாட்டின் மிகவும் திறமையான தொழிலாளிகளைப் பெறுவதற்கான நோக்கத்தோடும், தங்கள் உற்பத்திக்காக தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *