கணக்கில் வராத பணம் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது எஃப்ஐஆர் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது!
மார்ச் மாதம் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரான வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பராவிடம்,