விளையாட்டு வல்லரசு கனவு: நூலாம்படைகளை நீக்கும் தமிழ்நாட்டின் புதிய வியூகம்!
ஒரு நாடு வல்லரசு (Superpower) என்ற அங்கீகாரத்தைப் பெற, கல்வி, பொருளாதாரம், உட்கட்டமைப்பு மற்றும் இராணுவ பலம் ஆகியவற்றில் தன்னிறைவு பெற்றிருப்பது மட்டும் போதாது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற உச்சத்தில் உள்ள நாடுகளைப் போல, விளையாட்டுத் தரத்திலும் அது மேம்பட்டு இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, கிரிக்கெட், ஹாக்கி தவிர, பல விளையாட்டுகளில் இந்தியா உலக அரங்கில் இன்னும்
