டெல்லியில் சோனியா, ராகுலை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஜய்! காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி!
தமிழகத்தில் தவெக கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் முதல் டெல்லி பயணம் கூட்டணிக்குள்ளேயே ஒரு புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல்வர் விஜய், அங்குள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்திக்காமல் சென்னை புறப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காங்கிரஸின் டெல்லி வரவேற்பும்,
