“வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்: நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றும் நேரம்”
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவுநாள் (29.012025) நெருங்கும் நிலையில், உங்கள் கனிவான பார்வைக்கு தோழமையுடன் இந்த மடலை அனுப்புகிறோம். தன்னுடைய ஈடு இணையற்ற உயிர் தியாகத்தாலும், அளவிட இயலாத அறிவாற்றலாலும் உலகெங்கும் தமிழினத்தை தலைநிமிரச் செய்த அந்த மாவீரனின் நினைவு நாளில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என அனைத்து எல்லைகளையும் கடந்து தமிழர்களை ஒன்று திரட்டி வீரவணக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.